கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவ வீரர்களும், இளம் பட்டாளமும் இணைந்து உள்ளன.
அனுபவ வீரர்களைக் கொண்ட மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007ல் முதல் 'டி-20' உலக கோப்பையை வென்றது.
அபோது இந்திய அணி வீரர்களின் சராசரி வயது 23.6. 'டி-20' உலக கோப்பைத் தொடரில் பங்கேற்றதில் இது தான் இளமையான இந்திய அணியாக இருக்கிறது. 2009ல் இந்திய அணி வீரர்களின் சராசரி வயது 24.2 ஆக இருந்தது. 2010ல் 25.8 ஆக அதிகரித்தது. 2012ல் 28.0 ஆக ஆனது. 2014ல் பைனல் வரை சென்ற அணியின் வயது 26.8 ஆக குறைந்தது. 2016ல் 28.3, 2021ல் 28.9 என அதிகரித்தது.
தற்போது உச்சபட்சமாக இந்திய அணியின் சராசரி வயது 30.2 ஆக உள்ளது. இதுதான் மிகவும் சீனியர் அணி. தினேஷ் கார்த்திக்குக்கு 37 வயதாகிறது. அவர் தான் மூத்த வீரர். இவருக்கு அடுத்து அஸ்வின் 36, ரோகித் சர்மா 35, கோலி 33, சஹல் 32, ஷமி 32 வயதுடன் உள்ளனர்.
சீனியர் கேப்டன்
'டி-20' உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணிகளின் 'சீனியர்' கேப்டன் ரோகித் சர்மா தான். இதற்கு முன் 2016ல் தோனி, 34 வயதில் கேப்டனாக களமிறங்கினார்.
பாகிஸ்தான் வீரர்களின் வயது
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸாம் வயது 27. இந்திய கேப்டன் ரோகித்துடன் ஒப்பிடுகையில் அனுபவம் குறைந்தவர். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானுக்கு 30 வயது ஆகிறது. ஷான் மசூத் 32, துணை கேப்டன் ஷதாப் கான் 23, முகமது நவாஸ் 28, ஹைதர் அலி 21, இஃப்திகர் அகமது 32, ஆசிஃப் அலி 30, நஸீம் ஷா 19, ஹாரிஸ் ரெளஃப் 28, ஷாஹீன் அஃப்ரிடி 22, குஷ்டில் ஷா 27, முகமது ஹஸ்னைன் 22, முகமது வாசிம் 21.
பெரும்பாலும் இளம் பட்டாளத்தைக் கொண்ட அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது. பாகிஸ்தானின் மிக இளம் வயது வீரர் நஸீம் ஷா ஆவார்.