Most International Centuries: ஒரு போட்டியில் சதம் விளாசினாலே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கவனிப்படுவார்கள். அப்படி இருக்கும் போது, சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிகப்படியாக சதங்கள் விளாசி தற்போது விளையாடி வரும்  முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


1. விராட் கோலி - இந்தியா 


இந்த அட்டவணையில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர், விராட் கோலி. இவர் இதுவரை 74 சதங்கள் விளாசியுள்ளார். இதில் 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 46 சதங்களும், 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 சதங்களும் 115 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதமும் விளாசியுள்ளார்.                 


2. ஜோ ரூட்  -  இங்கிலாந்து 


இரண்டாவது இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் க்ளாசிக் ப்ளேயர் ஜோ ரூட். இவர் இதுவரை 45 சர்வதேச சதங்கள் விளாசியுள்ளார். இதில் 158 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 16 சதங்களும், 129 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்களும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இன்னும் இந்தவகைப் போட்டியில் மட்டும் சதம் அடிக்காமல் உள்ளார். 


3.  டேவிட் வார்னர்  -  ஆஸ்திரேலியா


இந்த அட்டவணையில் அடுத்த இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் வார்னர். இவரும் சர்வதேச அரங்கில் 45 சதங்கள் விளாசியுள்ளார். இதில் 141 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 சதங்களும், 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 சதங்களும் 99 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதமும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


4. ரோகித் ஷர்மா - இந்தியா 


நான்வாது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் ஷர்மா. இவர் இதுவரை சர்வதேச அரங்கில் 43 சங்களை பதிவு செய்துள்ளார். இதில் 241 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 சதங்களும், 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 சதங்களும் 148 டி20 போட்டிகளில் விளையாடி 4  சதங்கச்ளும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


5. ஸ்டீவ் ஸ்மித் -  ஆஸ்திரேலியா 


இந்த அட்டவணையில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 42 சதங்கள் விளாசியுள்ளார். இதில் 139 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்களும், 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களும் 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இந்த வகை போட்டியில் மட்டும் இன்னும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


6. கேன் வில்லியம்சன்  - நியூசிலாந்து


இந்த வரிசையில் அடுத்த வரிசையில் இருப்பவர் நியூசிலாந்து அணியின் ஆஸ்தான ப்ளேயர் கேன் வில்லியம்சன். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 39 சதங்கள் விளாசியுள்ளார். இதில் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 சதங்களும், 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்களும் 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இந்த வகை போட்டியில் மட்டும் இன்னும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


7. பாபர் அசாம் - பாகிஸ்தான் 


ஏழாவது இடத்தில் உள்ளவர் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள பாபர் அசாம். வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான இவர் இதுவரை 28 சதங்கள் விளாசியுள்ளார். அதில், 95 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களும், 47 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்களும், 99 டி20 போட்டிகளில் 2 சதங்களும் விளாசியுள்ளார். 


8. தமிம் இக்பால் -  வங்காளதேசம் 


இந்த வரிசையில் 8வது இடத்தில் இருப்பாவர் வங்காள தேச அணியின் ஆஸ்தான ப்ளேயர் தமிம் இக்பால். இவர் இதுவரை 25 சர்வதேச சதங்கள் விளாசியுள்ளார். இதில் , 231 ஒருநாள் போட்டிகளில் 14 சதங்களும், 69  டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களும், 78 டி20 போட்டிகளில் ஒரு சதமும் விளாசியுள்ளார். 


9. ஷிகர் தவான் -  இந்தியா 


இந்த அட்டவணியில் இடம் பெறும் மூன்றாவது இந்திய வீரர் ஷிகர் தவான். இவர் இதுவரை 24 சர்வதேச சதங்கள் விளாசியுள்ளார்.  இதில் , 167 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களும், 34  டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்களும், 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இன்னும் இந்தவகை போட்டியில் மட்டும் சதம் விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


10. டிகாக் -  தென் ஆப்ரிக்கா 


இந்த அட்டவணையில் 10வது இடத்தில் இருப்பவர் தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக். இவர் இதுவரை 23 சர்வதேச சதங்கள் விளாசியுள்ளார். இதில் , 137 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களும், 54  டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்களும், 77 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இன்னும் இந்தவகை போட்டியில் மட்டும் சதம் விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.