இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.  146 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்ற பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றதுள்ளது. முன்னதாக, 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ரன் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் வென்ற அணி என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகள் அணி பெற்றிருந்தது. 


இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்


நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வென்றது. 


இரண்டாவது டெஸ்ட் போட்டி, வெல்லிங்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 435 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் 153 ரன்களும் ஹாரி ப்ரூக்ஸ் அபாரமாக ஆடி 186 ரன்களும் எடுத்தனர். 


முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 209 ரன் எடுத்து. டின் சவுதி அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டூவேர்ட் போர்ட் நான்கு விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாஜ் லீச் இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


ஆட்டத்தில் ஃபாலோ ஆன் முறை பின்பற்றப்பட்டது. அதாவது, முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் அணி எதிரணியை ஆட்டத்தை தொடர சொல்லலாம் என்ற விதியின் படி, நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடர்ந்தது. 


இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய நியூசிலாந்து அணி 483 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாத்தம், டீவொன் கான்வே இருவரும் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்க்கு 149 ரன் சேர்த்தனர். டாம் லேத்தம் 11 பவுண்ரி எடுத்து 83 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் ஃபார்முக்கு திரும்பினார். சதம் அடித்த கேன் 12 பவுண்ரிகளுடன்  132 ரன்னில் அவுட் ஆனார். அணியில் அதிகபட்சமாக டாம் ப்ளண்டெல் 90 ரன்னும், டார்யல் மிட்செல் 54 ரன் எடுத்து அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 483 ரன் எடுத்திருந்தது.


கேன் வில்லியம்சன் சதம்


நியூசிலாந்து அணியில் அதிக சதம் அடித்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார் கேன் வில்லியம்ன்சன். 26 சதங்கள் எடுத்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் 19 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் பட்டியலில் 7787 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் கேன் வில்லியம்சன்.


258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் தடுமாறி விளையாடினர். ஒரு புறம் இங்கிலாந்து அணி வீரர்கள் இலக்கினை வெல்ல ரன்போர்டில் ஸ்கோர் எடுக்க, மறுபுறம் நியூசிலாந்து பவுலர்கள் சிறப்பான பந்து வீச்சால் 80 ரன்களுக்குள் 5 விக்கெட்களை வீழ்த்தினர். இந்நிலையில், ஜோ ரூட் களமிறங்கி அதிரடியா ஆடி 95 ரன் எடுத்து நீல் வாக்னர் பவுலிங்கில் அவுட் ஆனார். 201 ரன் வரை சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி கொஞ்சம் தடுமாறினாலும், பென் ஸ்டோகஸ் களமிறங்கியுடன் வலிமையுடன் ஆட்டத்தை நகர்த்திச் சென்றது. போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், மாஸ்டர் பவுலர் டிம் செளதியின் பந்தில் பென் ஸ்டோர்க்ஸ் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.


ஆட்டம் நியூசிலாந்து அணியின் வசம் சென்றது. அடுத்தடுத்து வந்த பவுலர்களும் அணிக்கு ரன் சேர்த்தனர். வெற்றிக்கு 2 ரன் மட்டும் தேவையாக இருந்தது. இங்கிலாந்து அணி வசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. நீல் வேக்னரின் விக்கெட் ஆட்டத்தை மாற்றியது. இங்கிலாந்து அணியின்  நீல் வேக்னர்  ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார். பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் எடுத்த ஒரு விக்கெட் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமை நியூசிலாந்து அணிக்கு கிடைத்தது.


ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் அணி டெஸ்ட்


ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி நிகழ்ந்த டெஸ்ட் போட்டில் வரலாற்றில் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன், 1993-இல் ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையேயான போட்டி அட்லேட் நகரில் நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்திய அணி வென்றது.  வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் ஒரு ரன் த்ரில் வெற்றி நடந்தது அதுவே முதல்முறை. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.


ஃபாலோ ஆன் முறையில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி


டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஃபாலோ ஆன் முறைபடி டெஸ்டை வென்றது இது நான்காவது முறையாகும். முன்னதாக, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள்   ஃபாலோ ஆன்-ல் போட்டிகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


ஃபாலோ ஆன்-னில் போட்டிடை வென்ற மூன்றாவது அணி என்ற சாதனையையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. முன்னதாக, இந்தியா, இங்கிலாந்து அணி இந்த முறையில் வென்றுள்ளது. 


மேலும், ஃபாலோ ஆன்- நடைமுறை பின்பற்றப்பட்டும், தோல்வியடைந்த இரண்டாவது அணி இங்கிலாந்து ஆகும். ஏற்கனவே மூன்று முறை ஆஸ்திரேயா அணி ஃபாலோ ஆன்-னில் தோல்வியடைந்துள்ளது. 


ஃபாலோ ஆன் - டெஸ்ட் வெற்றிகள் 



  • இங்கிலாந்து பத்து ரன்னில் வித்தியாசத்தில் வெற்றி  vs ஆஸ்திரேலியா  - சிட்னி, 1894

  • இங்கிலாந்து அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி vs ஆஸ்திரேலியா  - லீட்ஸ், 1981

  • இந்தியா 171 ரன் வித்தியாசத்தில் வெற்றி  vs ஆஸ்திரேலியா  - கல்கத்தா, 2001

  • நியூசிலாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி  vs இங்கிலாந்து  - வெல்லிங்டன்,  2023


நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்கு எதிரா டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது போட்டியில் ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார். ஹாரி ப்ரூக் தொடர் நாயகன் விருது பெற்றார்.