நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணங்களுக்கான இந்திய அணிகளை தேசிய தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா அறிவித்துள்ளார். டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணைக் கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த தொடர்களில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். மேலும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 இந்திய அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்& விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்& விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
வங்காளதேச ஒருநாள் போட்டிகளுக்கான அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், டபிள்யூ சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்
வங்கதேச டெஸ்டுக்கான அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், செட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.