டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 1 தோல்வியுடன் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 


முன்னதாக, இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டி நேற்று நடைபெற்றது.  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. 


34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, தொடக்கத்தில் 10 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு இணைந்த மார்க்கரம் - மில்லர் கூட்டணி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இரண்டு பந்து மீதமிருக்க தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிபெற செய்தனர். மார்க்கரம் 52 ரன்களில் வெளியேறினாலும், மில்லர் 59 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தார். 


தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான நேற்றைய டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட இழந்துவிட்டதாக கூறப்பட்டது. நேற்றுமுதல் இதனால் சமூக வலைத்தளங்களில் காமெடியாக பல மீம்ஸ் வெளிவந்தது.










தற்போதுவரை, டி20 உலகக் கோப்பை தொடர் குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிக்கு எதிராக கடைசி பந்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றி பிரகாசமாக இருந்திருக்கும். ஆனால், தற்போது பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு ஒரு நூல் அளவில் தொங்கி கொண்டிருக்கிறது.  


இந்தநிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல பின்வரும் நிகழ்வுகள் நடந்தால் நிச்சயம் அரையிறுதிக்கு செல்லும். அவை, பாகிஸ்தான் அடுத்து விளையாட இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டும். அதேபோல், இந்திய அணி தான் சந்திக்க இருக்கும் ஜிம்பாவே மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோற்க வேண்டும். மேலும், தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதியை எட்டும்.