இந்திய கிரிக்கெட் அணி மார்ச் மாதம் வரை ஆடும் ஆட்டங்கள் தொடர்பான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 


பொதுவாக விளையாட்டுகளில் பல வகைகள் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உலகளவில் உள்ளது. கிரிக்கெட் விளையாட முடியாத குழந்தைகள் முதல் விளையாடவே தெம்பில்லாத முதியவர்கள் வரை ஆண், பெண் வித்தியாசமில்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். எந்த அணி விளையாண்டால் என்ன, எத்தனை ஆண்டுகள் பழமையான மேட்ச் ஒளிபரப்பினால் என்ன, என்னால் கிரிக்கெட் பார்க்காமல் ஒருநாளும் கடக்க முடியாது என நினைப்பவர்கள் ஏராளம். 


இப்படிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி விளையாடும் மேட்ச் என்றால் சொல்லவா வேண்டும். எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி விட்டு டிவி முன்பும், மைதானத்திலும் கூடி விடுவார்கள். இப்படியான நிலையில் மார்ச் மாதம் வரை இந்திய அணி விளையாடும் போட்டிகள் பற்றி நாம் காணலாம். 


இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்


ஒருநாள் தொடர் 



  • ஜூலை 27 - முதல் ஒருநாள் போட்டி

  • ஜூலை 29 - இரண்டாவது ஒருநாள் போட்டி

  • ஆகஸ்ட் 1 - மூன்றாவது ஒருநாள் போட்டி 


டி20 போட்டி



  • ஆகஸ்ட் 3 - முதல் டி20 போட்டி

  • ஆகஸ்ட் 6 - இரண்டாவது டி20 போட்டி

  • ஆகஸ்ட் 8 - மூன்றாவது டி20 போட்டி

  • ஆகஸ்ட் 12 -  நான்காவது டி20 போட்டி

  • ஆகஸ்ட் 13 - ஐந்தாவது டி20 போட்டி


இந்தியா vs  அயர்லாந்து 


டி20 போட்டி



  • ஆகஸ்ட் 18 - முதல் டி20 போட்டி

  • ஆகஸ்ட் 20 - இரண்டாவது டி20 போட்டி

  • ஆகஸ்ட் 23 - மூன்றாவது டி20 போட்டி


இந்தியா vs ஆஸ்திரேலியா


ஒருநாள் தொடர்  



  • செப்டம்பர் 22 - முதல் ஒருநாள் போட்டி (மொகாலி)

  • செப்டம்பர் 24 - இரண்டாவது ஒருநாள் போட்டி (இந்தூர்)

  • செப்டம்பர் 27 - மூன்றாவது ஒருநாள் போட்டி  (ராஜ்கோட்)


டி20 போட்டி



  • நவம்பர் 23 - முதல் டி20 போட்டி (விசாகப்பட்டினம்)

  • நவம்பர் 26 - இரண்டாவது டி20 போட்டி (திருவனந்தபுரம்)

  • நவம்பர் 28 - மூன்றாவது டி20 போட்டி (கவுஹாத்தி)

  • டிசம்பர் 1 -  நான்காவது டி20 போட்டி (நாக்பூர்)

  • டிசம்பர் 3 - ஐந்தாவது டி20 போட்டி (ஹைதராபாத்)


இந்தியா vs  ஆப்கானிஸ்தான்


டி20 போட்டி



  • ஜனவரி 11  - முதல் டி20 போட்டி (மொகாலி)

  • ஜனவரி 11  - இரண்டாவது டி20 போட்டி (இந்தூர்)

  • ஜனவரி 17 - மூன்றாவது டி20 போட்டி (பெங்களூரு)


இந்தியா vs  இங்கிலாந்து 


டெஸ்ட் தொடர் 



  • ஜனவரி 25 முதல் 29 வரை  - முதல் டெஸ்ட் (ஹைதராபாத்)

  • பிப்ரவரி 2 முதல் 6 வரை  - இரண்டாவது டெஸ்ட் (விசாகப்பட்டினம்)

  • பிப்ரவரி 15 முதல் 19 வரை  - மூன்றாவது டெஸ்ட் (ராஜ்கோட்)

  • பிப்ரவரி 23 முதல் 27 வரை  - நான்காவது டெஸ்ட் (ராஞ்சி)

  • மார்ச் 7 முதல் மார்ச் 11 வரை - 5வது டெஸ்ட்  (தர்மசாலா)