இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அம்பயர்களின் முடிவு குறித்து ஹர்மன்பிரீத் கூறியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 


என்ன நடந்தது..? 


வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி டையில் முடிந்ததால் தொடரானது 1-1 என சமநிலையில் முடிந்தது. இந்த போட்டியில் இந்திய கேஒடன் ஹர்மன்பிரீத் கவுர், நஹிதா அக்தர் பந்த் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அப்போது, ஹர்மன் களத்திலேயே நடுவரின் முடிவுக்கு எதிராக தனது கையில் இருந்த பேட்டால் ஸ்டம்ப்ஸ்களை வேகமாக அடித்து தள்ளிவிட்டு, திட்டிகொண்டே சென்றதாக கூறப்படுகிறது. 


இதற்குப் பிறகு, ஹர்மன்ப்ரீத் கவுர், போட்டி டையில் முடிவடைந்த பின்னர், பரிசளிப்பு விழாவின் போது நடுவர்களை பகிரங்கமாக கிண்டல் செய்த  ஹர்மன்பிரீத், விருது வழங்கும் விழாவில் அம்பயராகிய நீங்களும் வந்து வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் இல்லை என்றால் எங்களுக்கு இது சாத்தியமில்லை என்று கேட்டுக் கொண்டார். இந்திய கேப்டனின் இந்த செயலால் கோபமடைந்த வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா, தனது அணியை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.


தொடர்ந்து, இந்தப் போட்டியிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டைத் தவிர, இங்கு நடக்கும் நடுவர்களைப் பார்த்து வியப்படைகிறேன். அடுத்த முறை வரும்போது, ​​இந்த மாதிரி அம்பயரிங்கிற்கு ஏற்கனவே தயாராகி வருவோம். இங்கு மிக மோசமான நடுவர் இருப்பதாக நான் முன்பே கூறியிருந்தேன். சில முடிவுகளால் நான் மகிழ்ச்சியடையவில்லை” என தெரிவித்தார். 


இரண்டு போட்டிகள் விளையாட தடையா..? 


இதையடுத்து, ஐசிசி போட்டி விதிமுறைப்படு, உபகரணங்கள் சேதத்திற்கு மூன்று டிமெரிட் புள்ளிகளும், போட்டி அம்பயர்களை பொதுவெளியில் விமர்சிப்பதற்கு டிமெரிட் புள்ளிகளையும் ஹர்மன்பிரித் மீதுஇஅ பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதன்படி, ஒரு வீரர் அல்லது வீராங்கனை 2 வருடங்களுக்குள் (24 மாதங்களுக்குள்) நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டிமெரிட் புள்ளிகள் பெற்றால், அவை இடைநீக்க புள்ளிகளாக ஏற்றுக்கொள்ளப்படும். நான்கு முதல் ஏழு டிமெரிட் புள்ளிகள் பெற்ற வீரர் அல்லது வீராங்கனைகள் இரண்டு போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள். அதாவது, ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுபவர்களின் அட்டவணையில் எது முதலில் வந்தாலும் அது தடைசெய்யப்படும்.


இந்திய மகளிர் அணி தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் அடுத்த போட்டியில் விளையாட உள்ளதால், ஹர்மன்பிரீத் 2 போட்டிகளில் விளையாடாமல் இருக்க வாய்ப்புள்ளது.  


கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியின் போது ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு டிமெரிட் புள்ளிகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.