Sitanshu Kotak :புதிய பேட்டிங் பயிற்சியாளர் தேடல்? டாப் லிஸ்ட்டில் இவர் பெயர் தான்! யார் இந்த சிதான்ஷு கோடக்

தற்போது இந்தியா-ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் சிதான்ஷு கோடக் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன் பொறுப்பேற்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

Continues below advertisement

தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளாராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

டீம் இந்தியாவின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்: 

தொடர்ச்சியான தொடர் தோல்விகளைத் சந்தித்து வரும் இந்திய அணியின் பேட்டிங் க்டும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது: சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 0-3 தோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இரண்டு தோல்விகளிலும் இந்தியாவின் பேட்ஸ்மென்களின் தொடர் சொதப்பல்கள் தான் காரணமாக அமைந்தது. 

இந்திய பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணில் சுழலுக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் எதிராகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிசிசிஐ நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், கவுதம் கம்பீர் தலைமையிலான பயிற்சி அமைப்பை மேம்படுத்த முடிவு செய்தது. சிறப்பு பேட்டிங் பயிற்சியாளர் விரைவில் நியமிக்கப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர்  தான் தற்போது பேட்டிங் துறையை மேற்பார்வையிட்டு வரும் நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் பதவி அதிகாரப்பூர்வமாக காலியாக உள்ளது.

இந்தியாவின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு சிதான்ஷு கோடக் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  தற்போது இந்தியா-ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் கோடக் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன் பொறுப்பேற்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: Ranji Trophy; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...

யார் இந்த சிதான்ஷு கோடக்?

சவுராஷ்டிராவை சேர்ந்த சிதான்ஷு கோடக்  1992 முதல் 2012 வரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். 130 முதல் தர  போட்டிகளில் விளையாடி 15 சதங்கள் மற்றும் 55 அரை சதங்கள் உட்பட 41.76 சராசரியில் 8,061 ரன்கள் எடுத்துள்ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில்  89 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 26 அரை சதங்களுடன் 42.23 சராசரியில் 3,083 ரன்கள் எடுத்துள்ளார்.மேலும் டி20 கிரிக்கெட்  9 போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் எடுத்தார்.

முதல்தர கிரிக்கெட்டில் 70 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் வீழ்த்திய கோடக் ஒரு பந்துவீச்சாளராகவும் பிராகசித்தார்.

இதையும் படிங்க: Brisbane heat vs Hobart hurricanes: ஐயோ பத்திக்கிச்சு! திடீரென கிளம்பிய நெருப்பு.. ஷாக்கான வீரர்கள்! நடந்தது என்ன?

பயிற்சி சாதனைகள்:

ஓய்வு பெற்ற பிறகு, கோட்டக் பயிற்சியாளராக  மாற்றி தனது முத்திரையை பதித்தார். இவர் 2020ல் சவுராஷ்டிரா அணி தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 

அதே போல இவர் இந்தியா-ஏ பயிற்சியாளராகவும் பணி புரிந்தார். ராகுல் டிராவிட் NCA இயக்குநரான பிறகு 2019 இல் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணங்களை நிர்வகித்துள்ளார்.

மேலுக் ஐபிஎல் (2017) இல் குஜராத் லயன்ஸ் அணிக்கு உதவி பயிற்சியாளராக பணியாற்றினார் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் கேப்டன்சியின் கீழ் 2023 அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் T20 அணிக்கு பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola