பிக் பாஷ் லீக் தொடரில் மைதானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

பிக் பாஷ் லீக்: 

ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக உலகெங்கும் மிகவும் பிரபலமான தொடரான பிக் பாஷ் லீக் தொடர், இந்த தொடரில் மொத்தம் 8  அணிகள் பங்கேற்கிறது, இந்த நிலையில் இன்று பிரிஸ்பேன் ஹீட் மற்றும் ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 

இதையும் படிங்க: Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!

திடீரென பற்றிய தீ: 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  பிரிஸ்பென் ஹீட் அணி  20 ஓவர்களில் 201/6 என்ற இமாலய ஸ்கோரை அடித்தனர். மார்னஸ் லாபுசேன்  77 ரன்களுக்கும், மேட் ரென்ஷா மற்றும் டாம் அல்சோப் முறையே 40 மற்றும் 39 ரன்களுக்கும் எடுத்தனர். அடுத்ததாக இலக்கை துரத்திய ஹரிக்கென்ஸ் அணி  4 ஓவர்களில் 47/0 என்ற நிலையில் கேலேப் ஜூவல் மற்றும் மிட்செல் ஓவன் ஆகியோர் கிரீஸில் இருந்தனர், அப்போது திடீரென டிஜே அரங்கில் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மக்களை அங்கிருந்து அகற்றினர். அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதையும் படிங்க: AjithKumar Racing; அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?

இந்த விபத்து சம்பவம் காரணமாக  போட்டி தற்காலிகமாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 

அதன் பிறகு மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை அடைந்து த்ரில் வெற்றி பெற்றது. மேலும் இந்த தீ விபத்து காரணமாக மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. 

கடந்த டிசம்பரில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் போது, ​​ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் அடிலெய்டில் இரண்டு முறை ஃப்ளட்லைட் அணைந்ததால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது