ஓய்வு பெறும் ராகுல் டிராவிட்:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நாளை (ஜூன் 29) நடைபெற உள்ளது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்தவகையில் இந்த போட்டி முடிந்த உடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற உள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரவி சாஸ்திரியிடம் இருந்து பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக டிராவிட் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
பிசிசிஐ வெளியிட்ட வீடியோ:
இந்நிலையில் ராகுல் டிராவிட் ஓய்விற்கு முன்னதாக பிசிசிஐ ஒரு வீடியோ ஒன்றை இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கிரிக்கெட் மைதானத்திற்கு அப்பால் உருவாக்கப்பட்ட தருணங்களை எடுத்துரைக்கும் TeamIndia தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வார்த்தைகளில் ஒரு நிகழ்வு நிறைந்த பயிற்சி பயணம்" என்று பிசிசிஐ கூறியுள்ளது. அந்த வீடியோவில் ராகுல் டிராவிட்," அழகிய நினைவுகளை நான் உருவாக்கியிருக்கிறேன். இந்திய அணிக்கு பயிற்சி அளித்தது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மகிழ்வான ஒன்று" என்று கூறியுள்ளார்.
முன்னதாக ரோஹித் ஷர்மா ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், "எங்கள் எல்லோருக்கும் ராகுல் டிராவின் ஒரு முன்மாதிரி. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்துள்ளேன். நான் அவரிடன் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர வேண்டும் என்று கூறினேன். அவருடன் தனிப்பட்ட முறையில் அதிகமான நிமிடங்களை செலவு செய்துள்ளேன். டிராவிட்டுடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
மேலும் படிக்க: Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
மேலும் படிக்க:Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ