இந்திய அணி அட்டவணை:


ஐசிசி டி20 உலகக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று (ஜூன் 20) நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் தொடர்பான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.


அதன்படி ஜூலை மாதம் இந்திய அணி நேரடியாக ஜிம்பாப்வே சென்று அங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அதன் பிறகு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆகஸ்ட் முதல் வாரம் வரை இந்திய அணி இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை வங்கதேசம் எதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதே போன்ற அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்:






அதன் பிறகு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதை அடுத்து ஜனவரி மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி மார்ச் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றால் அங்கு விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.