மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் மார்ச் 4-ந் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் நிறைவு பெற்று பெண்கள் அணிகள் தயாராகி வரும் நிலையில், தற்போது மகளிர் ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சர் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரமீயர் லீக்கின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் செயல்பட உள்ளது.


இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் ஐ.பி.எல். ஆகும். கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ.பி.எல். தொடர் டி20 கிரிக்கெட்டை இந்தியாவின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.


மகளிர் ஐ.பி.எல்.:


கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஆண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.






2023ம் ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல். நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மகளிர் ஐ.பி.எல். வீராங்கனைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிக தொகைக்கு ஏலம் போனார். முதல் ஐ.பி.எல். தொடர் என்பதால் மொத்தம் 5 அணிகள் மட்டுமே களமிறக்கப்பட உள்ளன.


டைட்டில் ஸ்பான்சராக டாடா:


அடுத்தடுத்து வரும் மகளிர் ஐ.பி.எல். தொடரில் அதிகளவில் அணிகள் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்கள் ஐ.பி.எல். அணிக்கும் தற்போது டாடா உள்ள நிலையில், தற்போது மகளிர் ஐ.பி.எல். அணிக்கும் டாடா டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: GrandMaster: கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய விக்னேஷ்..! புதிய வரலாறு படைத்த தமிழக சகோதரர்கள்..!


மேலும் படிக்க: Women's T20 World Cup 2023: அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறதா இந்தியா? புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?