இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் நேற்று ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக்கில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை தன் பெயரில் பதிவு செய்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹன்ட்ரட் மகளிர் கிரிக்கெட் போட்டியில், நேற்று வெல்ஸ் பயர் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்ஸ் பயர் அணிக்காக களமிறங்கிய டாமி பியூமண்ட் 61 பந்துகளில் 20 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உதவியுடன் 118 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம், ஹன்ட்ரட் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை டாமி பெற்றுள்ளார். 32 வயதான அவர் கடந்த ஆண்டு ஆடவர் போட்டியில் வில் ஜாக்ஸ் மற்றும் வில் ஸ்மீட் பெற்ற பிறகு. ஒட்டுமொத்த ஹன்ட்ரட் லீக் வரலாற்றில் மூன்றாவது சதமாக இது பதிவானது.
ஹன்ட்ரட் மகளிர் லீக்கில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்:
- 118 - டாமி பியூமண்ட் (வெல்ஷ் ஃபயர்) vs ட்ரெண்ட் ராக்கெட்ஸ், 2023
- 97* - பெத் மூனி (லண்டன் ஸ்பிரிட்) vs சதர்ன் பிரேவ், 2022
- 92* - ஜெமிமா ரோட்ரிக்ஸ் (வடக்கு சூப்பர்சார்ஜர்ஸ்) vs வெல்ஷ் ஃபயர், 2021
- 90* - லாரா வோல்வார்ட் (வடக்கு சூப்பர்சார்ஜர்ஸ்) vs மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ், 2022
- 81* - நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (ட்ரெண்ட் ராக்கெட்ஸ்) vs லண்டன் ஸ்பிரிட், 2023
ஒட்டுமொத்த ஹன்ட்ரட் லீக்கில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
118 - டாமி பியூமண்ட் (வெல்ஷ் ஃபயர்) vs ட்ரெண்ட் ராக்கெட்ஸ், 2023
108* - வில் ஜாக்ஸ் (ஓவல் இன்வின்சிபிள்ஸ்) vs சதர்ன் பிரேவ், 2022
101* - வில் ஸ்மீட் (பர்மிங்காம் பீனிக்ஸ்) vs சதர்ன் பிரேவ், 2022
97* - பெத் மூனி (லண்டன் ஸ்பிரிட்) vs சதர்ன் பிரேவ், 2022
93 - டான் லாரன்ஸ் (லண்டன் ஸ்பிரிட்) vs ட்ரெண்ட் ராக்கெட்ஸ், 2023
பியூமண்ட்டின் இந்த அதிரடி இன்னிங்ஸால் வெல்ஸ் ஃபயர் அணி 100 பந்துகளில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்களை இழந்து 140 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக, வெல்ஷ் பயர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
யார் இந்த டாமி பியூமண்ட்..?
டாமி பியூமண்ட் தனது சிறுவயதில் அவரது தந்தை மற்றும் சகோதரரால் ஈர்க்கப்பட்டு, கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். சிறு வயதில் க்ளப் கிரிக்கெட்டில் இவரது வேகம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த, சர்வதேச கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணிக்காக அறிமுகம் ஆனார்.