ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அரங்கில் நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்குவதற்கான தேதியை ஐசிசி அறிவித்துள்ளது. 25ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கப்பட இருக்கிறது. 


சென்னையில் நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டிக்கு வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதேபோல், இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 14 ஆம் தேதி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் ஒன்றையொன்று சந்திக்கின்றன. இரு அணிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. 






இந்தநிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தேதியை ஐசிசி அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இது தவிர, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் செப்டம்பர் 15 முதல் ஆன்லைனில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. டிக்கெட்களை முன்பதிவு செய்ய https://cricketworldcup.com/register என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். 


முன்பதிவு எங்கே, எப்படி செய்வது..? 


அனைவரும் எதிர்பார்க்கப்படும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டியானது அக்டோபர் 5ம் தேதி  தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. இந்த பயிற்சி ஆடத்திற்கும் ரசிகர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும்.இதற்கான டிக்கெட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த பயிற்சி ஆட்டத்திற்க்கான டிக்கெட்கள் 25ம் தேதி விற்பனைக்கு வருகிறது. 


போட்டியின் முதல் ஆட்டம்: 


2023 ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறுகிறது. 2023 உலகக் கோப்பையின் முதல் மற்றும் கடைசி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதே நேரத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி எதிர்த்து விளையாடுகிறது. இந்த இரு அணிகளும் சென்னையில் நேருக்கு நேர் மோதுகின்றன


அகமதாபாத் ஹோட்டல்கள் ஒரு இரவுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாயாம்...


வெளியான தகவலின்படி, அகமதாபாத்தில் ஒரு இரவுக்கு ரூ. 4,000 என்று இருந்த ஹோட்டல்கள் இப்போது ரூ.60,000 என ஏற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அகமதாபாத்தில் ஹோட்டல்களின் விலை கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி காரணமாக அகமதாபாத்தில் டபுள் ஷேரிங் ஹோட்டல்களுக்கு ரூ.60,000 வரை கொடுக்கப்படுகிறது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டியால் ஹோட்டல்கள் மட்டுமின்றி பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான்  ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால்தான் இந்த விலை ஏற்றம் என்று கூறப்படுகிறது.