ஜனவரி 13-ம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை தொடர், மார்ச் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர் தலைமையின் கீழ் ஆட இருக்கும் தமிழ்நாடு அணியில், வாஷிங்டன் சுந்தருக்கு துணை கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் ரஞ்சி கோப்பை தொடருக்கு, 20 பேர் கொண்ட அணியை தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு அறிவித்திருக்கிறது. இதில், பேட்டர் சாய் சுதர்ஷன், வேகப்பந்துவீச்சாளர் சிலம்பரசன், அல்ரவுண்டர் சரவண குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர். 






மேலும் படிக்க: Arjun Tendulkar in Ranji Squad: 41 முறை சாம்பியனான மும்பை ரஞ்சி அணியில் சச்சின் மகன்: வரவேற்பும்... விமர்சனமும்!


2021-ம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு அணியை வெற்றிகரமாக வழிநடத்திச் சென்ற விஜய் சங்கர் ரஞ்சி கோப்பைக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் வாஷிங்டன் முதல் முறையாக துணை கேப்டன் பொறுப்பு வகிக்க உள்ளார். ஜனவரி 13-ம் தேதி தொடங்கும் தொடரில், சவுராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், இரயில்வே அணி, கோவா, ஜார்கண்ட் ஆகிய அணிகளோடு தமிழ்நாடு அணி எலைட் க்ரூப்-டி பிரிவில் இடம் பிடித்திருக்கிறது.


அனுபவ வீரர்கள் தினேஷ் கார்த்திக், நடராஜன் ஆகியோர் அணியில் இடம் பெறாதது தமிழ்நாடு அணிக்கு பின்னடைவாக இருக்கலாம். எனினும், இளம் வீரர்கள் கொண்ட படையோடு களமிறங்குவதால் தமிழ்நாடு அணி அசத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


அணி விவரம்: விஜய் சங்கர் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், பாபா அபாரிஜித், ஜெகதீசன், ஷாரூக்கான், சாய் சுதர்ஷன், பிரதோஷ் ரஞ்சன் பால், சூர்ய பிரகாஷ், கவுசிக் காந்தி, கங்கா ஸ்ரீதர் ராஜூ, சந்தீப் வாரியர், முகமது, சிலம்பரசன், சரவண குமார், அஸ்வின் க்றிஸ்ட், விக்னேஷ், சாய் கிஷோர், எம்.சித்தார்த், ஆர். கவின்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண