அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள்:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் தான் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண சங்கீத் நிகழ்ச்சியில் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் மூவரையும் மேடை ஏற்றிய நீதா மற்றும் முகேஷ் அம்பானி அவர்களை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடினமான காலங்கள் நீடிக்காது, ஆனால் கடினமான மனிதர்கள் சாதிக்கிறார்கள்:
பின்னர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நீதா அம்பானி வாழ்த்தி பேசினார். அப்போது பேசிய அவர், இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும் தனது மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வெற்றி தனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்தினார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியின் உற்சாகத்தையும், கடை ஓவரில் இந்திய அணி விளையாடியதையும் நினைவு கூர்ந்த நீதா அம்பானி கிட்டத்தட்ட முடியாத என்ற சூழலிலிருந்து இந்திய அணி வெற்றியைப் பெற்றதை தேசம் எப்படி மூச்சுத் திணறலுடன் பார்த்தது என்பதை எடுத்துக்காட்டினார். கடினமான காலங்கள் நீடிக்காது, ஆனால் கடினமான மனிதர்கள் சாதிக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி பேசினார். இவரைத் தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக கிரிக்கெட் வீரர்களை வாழ்த்தினார் மற்றும் இந்தியாவின் கடைசி உலகக் கோப்பை 2011 உணர்வை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.