டிஎன்பிஎல் இரண்டாவது போட்டி இன்று சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி பில்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ்:
திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் சிங் களமிறங்கினர். திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய சிவம் சிங் 38 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது அவரது ஐந்தாவது டிஎன்பிஎல் அரைசிதம் ஆகும். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் 28 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிய சிவம் சிங் 51 பந்துகளில் 78 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன் அணியின் வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களில் தங்களது கிரிக்கெட்டை பறி கொடுத்தனர்.
ஈஸ்வரன் ஹாட்ரிக் விக்கெட்:
சிறப்பாக பந்து வீசிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வரன் நான்கு ஓவர்களில் 6 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஈஸ்வரன் பெற்றார். மேலும், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் வீரர் ஈஸ்வரன் தனது முதல் ஹார்ட்ரிக் விக்கெட்டையும் எடுத்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் வீரர்கள் சரவண குமார் மற்றும் அதிசயராஜ் தல ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
திருச்சி அணிக்கு 161 இலக்கு:
20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. பொறுமையாக விளையாடி ரன்களை குவித்த திண்டுக்கல் டிராகன் அணியின் வீரர் பூபதி 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு 161 ரன்கள் இழக்காக நிர்ணயிக்கப்பட்டது.