உலககோப்பை சூப்பர் 12 சுற்றில் 34வது போட்டியில் ஜிம்பாப்வே – நெதர்லாந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.


ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் மாதவரே 1 ரன்னிலும், கேப்டன் எர்வின் 3 ரன்னிலும், விக்கெட் கீப்பர் சக்ப்வா 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணிக்காக சீன் வில்லியம்ஸ் – சிக்கந்தர் ராசா ஜோடி சிறப்பாக ஆடியது.




சிறப்பாக ஆடிய சீன் வில்லியம்ஸ் 28 ரன்களில் ஆடடமிழக்க, அடுத்து வந்த சும்பா 2 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் மிகவும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சிக்கந்தர் ராசா 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், கடைசி கட்ட வீரர்கள ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக ஜிம்பாப்வே அணி 19.2 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மைபர்க் 8 ரன்களில் ஆட்டமிழக்க, மேக்ஸ் ஓடவ்த் – டாம் கூப்பர் ஜோடி சிறப்பாக ஆடியது. இருவரும் நிதானமாக ஆட நெதர்லாந்து ஸ்கோர் மளமளவென எகிறிது. 12.5 ஓவர்களில் நெதர்லாந்து 90 ரன்கள் எடுத்திருந்தபோது சிறப்பாக ஆடிய கூப்பர் 29 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.




அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மேக்ஸ் ஓடவ்த் 47 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசியில் 18 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்தின் முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்த போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றதால் புள்ளிப்பட்டியலில் பெரியளவு மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : T20 World Cup 2022: ஜொலிக்காத கே.எல்.ராகுல் அணியில் நீடிப்பது இதற்காகத்தான்... - பயிற்சியாளர் டிராவிட் ஓபன் டாக்


மேலும் படிக்க : IND vs BAN T20 LIVE : டாஸ் வென்ற வங்காளதேசம்..! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா..?