டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தகுதிப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் அபுதாபியில் நேருக்கு நேர் மோதின.


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார். ஆனால், அவரது அதிரடி நீடிக்கும் முன்னரே அவரை மேக்ஸ்வேல் காலி செய்தார். 7 பந்தில் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்திருந்த தெம்பா பவுமாவை, இரண்டாவது ஓவர் வீசிய மேக்ஸ்வெல் போல்டாக்கினார்.




அடுத்து களமிறங்கிய வான்டெர் டுசென் 2 ரன்களிலும், பார்மிலே இல்லாத குயின்டின் டி காக் 7 ரன்களில் வெளியேறினார். இதனால், 23 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய எய்டன் மார்க்ரம் அணியை சரிவில் இருந்து மீட்பதற்காக பொறுப்புடன் ஆடினார். மிடில் வரிசையில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 13 ரன்களிலும், டேவிட் மில்லர் 16 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த ப்ரெடரியஸ் 1 ரன்னிலும் கேசவ் மகராஜா டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர்.


தனி ஆளாக போராடிய எய்டன் மார்க்ரம் 36 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் 8வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கடைசியில் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.




இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் ஐ.பி.எல்.லில் ஜொலிக்காத டேவிட் வார்னர் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.


முக்கிய பேட்ஸ்மேன் மிட்செல் மார்ஷூம் 11 ரன்களை 17 பந்தில் சேர்த்து ஆட்டமிழந்தார். இதயைடுத்து, ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும், கிளென் மேக்ஸ்வெல்லலும் நிதானமாக நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 38 ரன்களில் இருந்து 80 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். 34 பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் 3 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அடுத்த ஓவரிலே 18 ரன்களில் ஷம்சி பந்தில் போல்டானார். இதனால் ஆட்டம் தென்னாப்பிரிக்க வசம் சென்றது.




6வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடினர். 81 ரன்னில் பார்ட்னர்ஷிப்பை தொடங்கிய இவர்கள் இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் இரு ரன்களை ஸ்டோனிஸ் எடுத்தார். இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விளாசினார். மூன்றாவது பந்தை டாட் செய்தார். இதனால், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 3 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டோனிஸ் 4வது பந்தை பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றியுடன் உலககோப்பையை தொடங்க வைத்தார். தென்னாப்பிரிக்காவில் நோர்ட்ஜோ சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டோனிஸ் 16 பந்தில் 3 பவுண்டரிகள் உள்பட 24 ரன்களுடனும், மேத்யூ வேட் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண