டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தகுதிப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய தென்னாப்பிரக்கா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார். ஆனால், அவரது அதிரடி நீடிக்கும் முன்னரே அவரை மேக்ஸ்வேல் காலி செய்தார்.
7 பந்தில் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்திருந்த தெம்பா பவுமாவை, இரண்டாவது ஓவர் வீசிய மேக்ஸ்வெல் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வான்டெர் டுசெனும் 2 ரன்களில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் குயின்டின் டி காக்கும் 7 ரன்களில் வெளியேறினார். இதனால், 23 ரன்களுக்கு தென்னாப்பிரக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர், களமிறங்கிய எய்டன் மார்க்ரம் அணியை சரிவில் இருந்து மீட்பதற்காக பொறுப்புடன் ஆடினார். ஆனால், அவருக்கு மறுமுனையில் எந்த வீரர்களும் ஒத்துழைக்கவில்லை. ஹென்ரிச் கிளாசென் 13 ரன்களிலும், டேவிட் மில்லர் 16 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த ப்ரெடரியஸ் 1 ரன்னிலும் கேசவ் மகராஜா டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர்.
தனி ஆளாக போராடிய எய்டன் மார்க்ரம் 8வது விக்கெட்டாக வெளியேறினார். அவர் 36 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாட் கம்மின்ஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தியா- பாக் கிரிக்கெட்: கொடூர வெயிட்டிங்கில் ரசிகர்கள்.. பிவிஆரில் 80% டிக்கெட் இப்போதே காலி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்