2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற 20 அணிகளும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தியது. இதில் கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் கூட சிறப்பாக செயல்பட்டு, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் அணியை அமெரிக்கா வீழ்த்தி அசத்தியது. அதேபோல், ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மிரட்டியது. இந்தநிலையில், 2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள் வருகின்ற 19ம் தேதி (நாளை) முதல் தொடங்குகிறது.
இப்படி ஒரு புறம் 2024 டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடக்க, தற்போது 2026 டி20 உலகக் கோப்பை குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
வருகின்ற 2026 டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பை 2026 பிப்ரவரி மாதத்தில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. 10வது டி20 உலகக் கோப்பை 2026ல் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டைப் போலவே, 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும் 12 அணிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் 8 அணிகள் தகுதிச் சுற்று மூலம் 2026 டி20 உலகக் கோப்பைக்குள் நுழையும். 20 அணிகளுக்கு இடையே மொத்தம் 55 போட்டிகள் நடைபெறும். அதற்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விதிகளின்படி, 2024 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8க்கு தகுதிபெற்ற எட்டு அணிகளும் டி20 உலகக் கோப்பை 2026க்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இது தவிர, 2026 டி20 உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா மற்றும் இலங்கையும், ஐசிசி தரவரிசையில் சிறந்த தரவரிசையில் உள்ள மூன்று அணிகளும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
இப்போது இந்த விதியின்படி இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வங்கட்தேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகல் டி20 உலகக் கோப்பை 2024 போட்டியின் சூப்பர் 8க்குள் நுழைந்துள்ளன. எனவே, இந்த எட்டு அணிகளும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
மேலும் தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, ஏழாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் 11வது இடத்தில் உள்ள அயர்லாந்து ஆசிய மூன்று அணிகளும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. எனவே, இப்போது மற்ற அனைத்து அணிகளும் 2026 டி20 உலகக் கோப்பையை விளையாட விரும்பினால், தகுதி சுற்றின் மூலம் தகுதி பெற வேண்டும்.
2026 டி20 உலகக் கோப்பைக்கான தகுதி பெற்ற அணிகள்:
போட்டியை நடத்தும் அணி: இந்தியா, இலங்கை
டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் சுற்று: ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்காம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து
ஐசிசி டி20 தரவரிசைப்படி தகுதி பெற்ற அணிகள்: பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து.
2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகள்:
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான்.