T20 World Cup 2024 Warm-Up Matches: வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 2024க்கான பயிற்சி ஆட்டங்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை 2024ல் 20 அணிகள் விளையாட தயாராக உள்ளன.
இதையடுத்து, அதிகளவிலான அணிகள் பங்கேற்க இருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எப்போது டி20 உலகக் கோப்பை தொடங்கும் என ஆவலுடன் காத்திருக்கின்றன. வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ள நிலையில், வருகின்ற மே 27ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், எந்தெந்த அணிகள் எந்த நாளில் எந்தெந்த அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் மோத உள்ளது என்ற முழு பட்டியலையும் இங்கு பார்க்கலாம்.
எண் | மோதும் அணிகள் | இடம் | நாள் மற்றும் தேதி |
1 | கனடா vs நேபாளம், | கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், கிராண்ட் ப்ரேரி, டெக்சாஸ் | திங்கள், மே 27 |
2 | ஓமன் vs பப்புவா நியூ கினியா | பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட் மற்றும் டொபாகோ | திங்கள், மே 27 |
3 | நமீபியா vs உகாண்டா | பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட் மற்றும் டொபாகோ | திங்கள், மே 27 |
4 |
இலங்கை vs நெதர்லாந்து |
ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம், ப்ரோவர்ட் கவுண்டி, புளோரிடா | செவ்வாய், மே 28 |
5 | வங்கதேசம் vs அமெரிக்கா | கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், கிராண்ட் ப்ரேரி, டெக்சாஸ் | செவ்வாய், மே 28 |
6 | ஆஸ்திரேலியா vs நமீபியா | குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட் மற்றும் டொபாகோ | செவ்வாய், மே 28 |
7 |
தென்னாப்பிரிக்கா vs உள்ளூர் அணி |
ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம், ப்ரோவர்ட் கவுண்டி, புளோரிடா | புதன், மே 29 |
8 | ஆப்கானிஸ்தான் vs ஓமன் | குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட் மற்றும் டொபாகோ | புதன், மே 29 |
9 |
நேபாளம் vs அமெரிக்கா |
கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், கிராண்ட் ப்ரேரி, டெக்சாஸ் | வியாழன், மே 30 |
10 | ஸ்காட்லாந்து vs உகாண்டா | பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட் மற்றும் டொபாகோ | வியாழன், மே 30 |
11 | நெதர்லாந்து vs கனடா | கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், கிராண்ட் ப்ரேரி, டெக்சாஸ் | வியாழன், மே 30 |
12 | நமீபியா vs பப்புவா நியூ கினியா | பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட் மற்றும் டொபாகோ | வியாழன், மே 30 |
13 | வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா | குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட் மற்றும் டொபாகோ | வியாழன், மே 30 |
14 |
அயர்லாந்து vs இலங்கை |
ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம், ப்ரோவர்ட் கவுண்டி, புளோரிடா | வெள்ளிக்கிழமை, மே 31 |
15 | ஸ்காட்லாந்து vs ஆப்கானிஸ்தான் | குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட் மற்றும் டொபாகோ | வெள்ளிக்கிழமை, மே 31 |
16 |
வங்கதேசம் vs இந்தியா |
இன்னும் உறுதி செய்யப்படவில்லை | சனிக்கிழமை , ஜூன் 1 |
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடவுள்ளது. அந்த போட்டியும் எங்கு நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.