வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை 2024க்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. இதையடுத்து, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பையில் களமிறங்குகிறது. 


நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், நியூசிலாந்து அணி 2-2 என தொடரை பாகிஸ்தானுடன் சமன் செய்தது. 


பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு முழு அணியுடன் அணி செல்லவில்லை என்றாலும். டி20 உலகக் கோப்பைக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கேன் வில்லியம்சன், தற்போது ஐபிஎல் 2024ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 






டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள 20 அணிகளும் வருகின்ற மே 1ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டுமென ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகாவே இன்று நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தங்களது அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 


2024 டி20 உலகக் கோப்பை வருகின்ற ஜூன் 1 ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் நடைபெறவுள்ளது. இருப்பினும், நியூசிலாந்து தனது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜூன் 7ம் தேதியே விளையாடுகிறது. இந்த போட்டியானது கயானாவில் நடைபெறுகிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி குரூப் -சியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பையில் இந்த ஜெர்சியுடன்தான் விளையாடுகிறது...






சமநிலையில் சம பலத்துடன் நியூசிலாந்து அணி: 


உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்களின் நல்ல சமநிலையுடன் இருப்பதுபோல் தெரிகிறது. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, டேரில் மிட்செல் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். இதுதவிர மார்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திரா போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ரச்சின் ரவீந்திரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கி, அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினார்.  ஐபிஎல் 2024ல் ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். 


டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி: 






வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி மற்றும் டிம் சவுதி