சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 அரையிறுதிப் போட்டிக்கான ஆட்ட நடுவர்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதும் அரையிறுதி போட்டியில் எந்ததெந்த போட்டி நடுவர்கள் களமிறங்க இருக்கிறார்கள் என்ற பட்டியல் கிடைத்துள்ளது.
டிரினிடாட்டில் நடக்கும் அரையிறுதி 1ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதனை தொடர்ந்து, அரையிறுதி 2ல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
யார் யார் போட்டி நடுவர்கள்..?
தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை 2024 அரையிறுதி 1 டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் ஜூன் 27 (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் நிதி மேனன் ஆகியோர் டிரினிடாட்டில் நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆன் - பீல்ட் அம்பயர்களாக களமிறங்க போவதாக தெரிகிறது. அதேபோல், ரிச்சர்ட் கெட்டில்பரோ டிவி நடுவராகவும், அஹ்சன் ராசா நான்காவது நடுவராகவும் செயல்படவுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து போட்டியில் யார் யார்...?
இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி ஜூன் 27ம் தேதி இரவு 8 மணிக்கு கயானாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் கிறிஸ் கஃபேனி மற்றும் ரோட்னி டக்கர் ஆகியோர் போட்டி நடுவர்களாக களமிறங்குகின்றனர். அதே நேரத்தில், ஜோயல் வில்சன் டிவி நடுவராகவும், பால் ரீஃபில் நான்காவது நடுவராகவும் செயல்படவுள்ளனர்.
அரையிறுதி 1 - தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் (டிரினிடாட்)
போட்டி அதிகாரி: ரிச்சி ரிச்சர்ட்சன்
கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் நிதின் மேனன்
டிவி நடுவர்: ரிச்சர்ட் கெட்டில்பரோ
நான்காவது நடுவர்: அஹ்சன் ராசா
அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து (கயானா)
போட்டி அதிகாரி: ஜெஃப்ரி குரோவ்
கள நடுவர்கள்: கிறிஸ் கஃபேனி மற்றும் ரோட்னி டக்கர்
டிவி நடுவர்: ஜோயல் வில்சன்
நான்காவது நடுவர்: பால் ரீஃபெல்
முதல் அரையிறுதி:
2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான ரிசர்வ் டே உள்ளது. அதாவது மழை குறுக்கிட்டால் இந்த போட்டி நாளை மறுநாள் நடைபெறும். தென்னாப்பிரிக்க அணி சூப்பர்-8ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சூப்பர்-8 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி:
2024 டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான ரிசர்வ் நாள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மழையால் போட்டிக்கு இடையூறு ஏற்பட்டால், போட்டியை நடத்த 4 மணி நேரம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூப்பர்-8 போட்டியில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதேசமயம் சூப்பர்-8ல் இங்கிலாந்து அணி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.