IND vs PAK T20 World Cup Umpire Name: கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், உலகக் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியானது நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த சூழ்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பையில் யார் யார் நடுவர்களாக இருக்கப்போகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்களை பற்றிய முழு விவரங்கள் கீழே.. 

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் நடுவராக (அம்பயர்) இருப்பவர் யார்?

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நாளை நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் அனுபவம் வாய்ந்த நடுவர்கள் அடங்கிய அணி களமிறங்கவுள்ளது. அதன்படி, ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரோட்னி டக்கர் ஆகியோர் களத்தில் நடுவர்களாக செயல்படவுள்ளனர். மேலும், கிறிஸ் காஃப்னி மூன்றாவது நடுவராகவும், ஷாஹித் சைகாத் நான்காவது நடுவராகவும் செயல்பட இருக்கின்றன. மேட்ச் ரெஃப்ரி பொறுப்பு டேவிட் பூனிடம் வழங்கப்பட்டுள்ளது. 

ரிச்சர்ட் இல்லிங்வொர்த்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் இதுவரை 300 சர்வதேசப் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இதில் 99 டெஸ்ட் போட்டிகள், 160 ஒருநாள் போட்டிகள் மற்றும் 41 டி20 போட்டிகள் அடங்கும்.

போட்டி வடிவம் போட்டிகள் அம்பயர் டிவி அம்பயர்
டெஸ்ட் 99 69 30
ஒருநாள் 160 90 70
டி20 41 28 13

ரோட்னி டக்கர்: ரோட்னி டக்கர் 369 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இதில் 122 டெஸ்ட் போட்டிகள், 169 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகள் அடங்கும்.

 போட்டி வடிவம் போட்டிகள் அம்பயர் டிவி அம்பயர்
டெஸ்ட் 122 86 36
ஒருநாள் 169 102 67
டி20 78 53 25

கிறிஸ் காஃப்னி: கிறிஸ் காஃப்னி 273 சர்வதேசப் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இதில் 84 டெஸ்ட் போட்டிகள், 129 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகள் அடங்கும்.

போட்டி வடிவம் போட்டிகள் அம்பயர் டிவி அம்பயர்
டெஸ்ட் 84 54 30
ஒருநாள் 129 86 43
டி20 60 44 16

ஷாஹித் சைகத்: ஷாஹித் சைகத் 184 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இதில் 15 டெஸ்ட் போட்டிகள், 100 ஒருநாள் போட்டிகள் மற்றும் 69 டி20 போட்டிகள் அடங்கும்.

போட்டி வடிவம் போட்டிகள் அம்பயர் டிவி அம்பயர்
டெஸ்ட் 15 10 5
ஒருநாள் 100 63 37
டி20 69 50 19

டேவிட் பூன்: டேவிட் பூன் 359 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இதில் 76 டெஸ்ட் போட்டிகள், 176 ஒருநாள் போட்டிகள் மற்றும் 107 டி20 போட்டிகள் அடங்கும்.

போட்டி வடிவம் போட்டிகள் அம்பயர்
டெஸ்ட் 76 76
ஒருநாள் 176 176
டி20 107 107

இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்: 

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 7 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

கணிக்கப்பட்ட இரு அணிகளின் பிளேயிங் 11 விவரம்:

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சைம் அயூப், ஃபகார் ஜமான், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஆசம் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது அமீர்