ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024ல் குரூப் ஏ பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் முதல் அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி, அடுத்ததாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நேற்று அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 110 ரன்கள் எடுத்தது. 


பதிலுக்கு 10 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து, இந்திய அணிக்கு 18.2 ஓவர்களில் வெற்றியை தேடி தந்தார். 


கடுமையாக போட்டியிட்ட அமெரிக்க அணி: 


இப்போட்டியில் இந்தியாவுக்கு கடும் போட்டியை கொடுக்க அமெரிக்க அணி ஆரம்பம் முதலே முயற்சித்தது. அமெரிக்காவை பொறுத்தவரை சவுரவ் நேத்ராவால்கர் முதல் ஓவரிலேயே விராட் கோலியை செய்தார். இதன் தொடர்ச்சியாக, அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட  கேப்டன் ரோஹித் சர்மாவும் 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இப்படி சிறப்பான தொடக்கம் கொடுத்து இந்தியாவை ஒரு கட்டத்தில் இறுக்கிபிடித்த அமெரிக்க அணி, அந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் செய்த ஒரு தவறினால் போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. 


அமெரிக்காவுக்கு 5 ரன்கள் அபராதம்: 


இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட் ஆன பிறகு, அமெரிக்க அணி போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆரம்பத்தில் சூர்யகுமார் யாதவும் ரன்களை எடுக்க முடியாமல் திணறினார். அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க அணி சிந்தனையுடன் பந்துவீசுவதில் மும்முரமாக இருந்தது. ஆனால் இதன்போது அமெரிக்க அணி ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை ஓவரை தொடங்க ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொண்டனர். 


ஒரு அணி மூன்று முறை இதை செய்யத் தவறினால், நடுவர் 5 ரன்கள் அபராதம் கொடுத்தனர். அமெரிக்க கேப்டன் ஜோன்ஸ் ஒருமுறை அல்ல, தொடர்ந்து மூன்றி இந்த தவறை செய்ததால் அந்த அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது. 




கிட்டத்தட்ட வெற்றி பக்கம் நின்ற அமெரிக்க அணி: 


ஒருவேளை அமெரிக்க அணி இந்தத் தவறைச் செய்யாமல் இருந்திருந்தால், ஒருவேளை மிடில் ஓவரில் சூர்யகுமார் யாதவையும், ஷிவம் துபேவையும் அவுட் செய்திருந்தால்,  இந்திய அணி வெற்றிபெற கடினமாக இருந்திருக்கும். இன்னும் 15 ரன்கள் எடுத்திருந்தால் ஒருவேளை அமெரிக்க அணி வெற்றி பெற்றிருக்கலாம். 


ஐசிசி ஒரு அறிக்கையில், “முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இல்லை என்றால், இது அந்த இன்னிங்ஸில் மூன்று முறை நடந்தால் பந்துவீசும் அணிக்கு கூடுதலான 5 ரன்கள் வழங்கப்படும்.  அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் ஸ்டாப்-க்ளாக் விதியை மீறியதற்காக நடுவர்களால் இரண்டு முறை எச்சரிக்கப்பட்டார், ஆனால் மூன்றாவது முறையாக அவ்வாறு செய்த பிறகு, நடுவர் ஐந்து பெனால்டி ரன்களுக்கு உத்தரவிட்டார்.” என தெரிவித்தது. 


இதற்கு முன் எந்த அணி இப்படி செய்தது..? 


முன்னதாக, இந்த விதி 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஐசிசி தெரிவித்திருந்தது. எதிர்காலத்தில் சர்வதேச டி20 போட்டிகளிலும் இது பின்பற்றப்படும். இதன் காரணமாக இந்த விதியை மீறிய முதல் அணி என்ற பெருமையை அமெரிக்கா பெற்றது.