நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேற்று நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது.


இந்தியா த்ரில் வெற்றி:


நியூயார்க் மைதானம் பேட்டிங்கிற்கு சவால் அளிக்கும் விதமாக இருந்ததால், முதலில் பேட் செய்த இந்தியாவால் சிறப்பாக பேட் செய்ய முடியவில்லை. ரிஷப்பண்ட் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.


120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் திக்குமுக்காட வைத்தனர். பும்ரா சிராஜ், ஹர்திக் கலக்கலாக பந்துவீச பாகிஸ்தான் அணியை இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.


கண்ணீர் விட்ட பாகிஸ்தான் பவுலர்:


பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 8வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த நசீம்ஷா இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரால் எஞ்சிய 6 ரன்களை எடுக்க முடியவில்லை. இதனால், வெற்றியின் அருகில் வரை வந்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற வேதனையில் நசீம்ஷா மைதானத்திலே கண்ணீர் விட்டார். அவரை சக பேட்ஸ்மேனான ஷாகின் ஷா அப்ரீடி ஆறுதல் கூறி தேற்றினார். நசீம்ஷா 4 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்தார்.






வெறும் 21 வயதான நசீம்ஷா நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணி வீரர்களும் சிறப்பாகவே பந்துவீசினார்கள். 120 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மட்டுமே நிதானமாக ஆடினார். அதிரடி பேட்ஸ்மேனான ரிஸ்வானால் மைதானத்தில் பந்துகள் சிறப்பாக வந்ததால் ரன்களை எடுக்க முடியவில்லை.


அவர் 44 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து 4வது விக்கெட்டாக வெளியேறினார். கேப்டன் பாபர் அசாம் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் ஆடி 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்‌ஷர் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


மேலும் படிக்க: IND vs PAK Match Highlights: கடைசி நேரத்தில் கலக்கிய பும்ரா, அர்ஷ்தீப்.. பாகிஸ்தானை மீண்டும் உலகக் கோப்பையில் சரித்த இந்தியா..!


மேலும் படிக்க:  IND vs PAK: இம்ரான் கானை விடுதலை செய்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது வானில் பறந்த வாசகம்! வைரல் வீடியோ!