டி20 உலகக் கோப்பை 2024ன் 51வது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8ல் மோத இருக்கின்றன. அரையிறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் இரு அணிகளும் இந்த போட்டியில் தீவிரம் காட்டும். 


இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு  செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது. இப்போட்டியில் இதுவரை தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய விரும்புகிறது. மறுபுறம், ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த பின்னர் வரும் ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் எப்படியும் வெற்றிபெற விரும்புகிறது. 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 31 டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக இந்திய அணி 19 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போயுள்ளது. அதேநேரத்தில், டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 3 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 


இன்று மழைக்கு வாய்ப்பா..? 


வானிலை அறிக்கையின்படி, செயின்ட் லூசியாவில் காலை வேளையில் மழை பெய்ய 55 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும், வெப்பநிலை சுமார் 32 டிகிரியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இரு அணிகளும் எத்தனை புள்ளிகள்..? 


சூப்பர்-8 சுற்றில் இரு அணிகளும் மோதும் கடைசிப் போட்டி இதுவாகும். இந்திய அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்திற்கு எதிராக வெற்றியும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:


இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா/சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.


ஆஸ்திரேலியா அணி: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.


இரு அணிகளின் முழு விவரம்: 


இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.


ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.