டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு உலககோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது, 1992 உலககோப்பையில் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய விதம் போலவே அமைந்துள்ளது. இதனால், இந்த உலககோப்பையை பாகிஸ்தான் அணியே வெல்லும் என்று பலரும் ஆரூடம் கணித்து வருகின்றனர்,
இந்த நிலையில், நடப்பு உலககோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றினால் பாபர் அசாம் அந்த நாட்டின் பிரதமர் ஆவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆரூடம் கணித்துள்ளார். இன்று அடிலெய்டில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஷேன் வாட்சன் மற்றும் மைக்கேல் ஆர்தர்டன் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பேசிய சுனில்கவாஸ்கர், “ நடப்பு உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால் 2048ம் ஆண்டு பாபர் அசாம் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஆவார்” என்று பேசினார். 1992ம் ஆண்டு உலககோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான் 2018ம் ஆண்டு அந்த நாட்டின் பிரதமர் ஆனார். இதைக் கணக்கிட்டே 2022ம் ஆண்டு உலககோப்பையை பாபர் அசாம் வென்றால் அவர் 2048ம் ஆண்டு அந்த நாட்டின் பிரதமர் ஆவார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
1992ம் ஆண்டு உலககோப்பையிலும், நடப்பு உலககோப்பையிலும் ஒற்றுமையாக நடந்த நிகழ்வுகளை கீழே காணலாம். பாகிஸ்தான் அணி மெல்போர்னில் நடந்த முதல் போட்டியில் தோற்றது. குரூப் போட்டியில் இந்தியாவுடன் தோற்றது. குரூப் போட்டியில் கடைசி 3 போட்டியில் தொடர்ச்சியாக வென்றது. 1 புள்ளிகள் கூடுதலாக பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அரையிறுதியில் இரண்டாவதாகவே பேட் செய்து வெற்றி பெற்றது. உலககோப்பை இறுதிப்போட்டியில் மெல்போர்னில் ஆடியது. 1992ம் ஆண்டு உலககோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நடப்பு உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடனே இறுதிப்போட்டியில் மோதுகிறது.
மேலும் படிக்க : IND vs ENG, Match Highlights: பட்லர், ஹேல்ஸ் மிரட்டல் பேட்டிங்..! சொதப்பல் பவுலிங்..! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாப தோல்வி..
மேலும் படிக்க : Virat Kohli 4000 Runs T20: வீரா வீரா.. வாடா வாடா.. புதிய வரலாறு படைத்த விராட்கோலி..! 4 ஆயிரம் ரன்களை கடந்த மாஸ் மொமெண்ட்..