உலகம் முழுவதும் தற்போது மிகவும் ட்ரெண்டிங்கில் இருப்பது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்தான். எந்த அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும்? எந்த அணி அரையிறுதியில் இருந்து வெளியேறும்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த அக்டோபர் 22 ம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. குரூப் 1 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை மற்றும் அயர்லாந்து அணியும், குரூப் 2 சுற்றில் வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணியும் மோதி வருகிறது.
இந்த இரண்டு குரூப் பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்தநிலையில், எந்தெந்த அணி எந்த இடத்தில் உள்ளது ? யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதை இங்கே முழுமையாக காணலாம்.
குரூப் ஏ பாயிண்ட்ஸ் டேபிள் :
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | புள்ளிகள் |
நியூசிலாந்து | 3 | 2 | 0 | 1 | 5 |
ஆஸ்திரேலியா | 4 | 2 | 1 | 1 | 5 |
இங்கிலாந்து | 3 | 1 | 1 | 1 | 3 |
அயர்லாந்து | 4 | 1 | 2 | 1 | 3 |
ஆப்கானிஸ்தான் | 3 | 0 | 1 | 2 | 2 |
இலங்கை | 3 | 1 | 2 | 0 | 2 |
குரூப் பி பாயிண்ட்ஸ் டேபிள் :
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | புள்ளிகள் |
தென்னாப்பிரிக்கா | 3 | 2 | 0 | 1 | 5 |
இந்தியா | 3 | 2 | 1 | 0 | 4 |
வங்காளதேசம் | 3 | 2 | 1 | 0 | 4 |
ஜிம்பாவே | 3 | 1 | 1 | 1 | 3 |
பாகிஸ்தான் | 3 | 1 | 2 | 0 | 2 |
நெதர்லாந்து | 3 | 0 | 3 | 0 | 0 |