டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடர் நேற்று முதல் ஆஸ்திரேலியாவில் தொங்கி நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். 


இந்நிலையில் இந்தியா அணி இன்று நடைபெறும் முதல் பயிற்சிப் போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன் உள்ள மூன்று முக்கியமான சவால்கள் என்னென்ன?


முகமது ஷமியின் ஃபார்ம்:


இந்தியா கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமி களமிறங்க உள்ளார். எனினும் அவர் நீண்ட நாட்களாக எந்தவித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆகவே இன்றைய பயிற்சிப் போட்டியில் அவருடைய  ஃபார்ம் சரியாக தெரியவரும். இது உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக அவருக்கு நல்ல பயிற்சியாக அமையும். 






கார்த்திக் அல்லது பண்ட்:


டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை களமிறக்க உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. அனுபவ வீரர் கார்த்திக் அல்லது பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார்கள் என்று கருதப்படுகிறது. அவர்கள் இருவரின் ஆட்டங்களும் இந்தப் பயிற்சிப் போட்டியில் நிச்சயம் உற்று நோக்கப்படும். 


அஷ்வின் அல்லது சாஹல்:


ரவீந்திர ஜடேஜா இல்லாத காரணத்தால் அக்ஷர் பட்டேல் அணியில் இடம்பிடிப்பது உறுதியாக உள்ளது. அவருடன் இணைந்து மற்றொரு சுழற்பந்து வீச்சாளார் யார் என்பது உறுதியாக வில்லை. ஆகவே இந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அஷ்வின் அல்லது சாஹல் இந்தியா அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. 


டெர்த் ஓவர்களில் சொதப்பல்:


இந்திய அணி கடந்த சில டி20 போட்டிகளில் டெர்த் ஓவர்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. 17,18,19 மற்றும் 20 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் அதிகமாக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். பும்ரா இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக இருந்தாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டும். அவர்கள் இந்த கடைசி ஓவர்களில் ரன் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும். இது அணிக்கு பெரிய சவாலாக உள்ளது. இதையும் இந்திய அணி இந்தப் போட்டியில் கவனத்தில் கொள்ளும் என்று கருதப்படுகிறது.


ஆகவே இந்தியா அணி இந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளையும் சரியாக பயன்படுத்தி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இந்தப் பயிற்சிப் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று அசத்தும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.