உலககோப்பை இந்திய அணியில், அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணிக்கு இது பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜடேஜாவுக்கு பதிலாக களம் இறங்கும் ஆல் ரவுண்டர் யாராக இருப்பார் என்ற கேள்வியும், எழுந்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம், தொடங்கவுள்ள உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில், இந்திய அணியின் சீனியர் ப்ளேயர் மற்றும் ஆல்ரவுணடர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜடேஜாவுக்கு உலககோப்பை தொடரில் களம் இறங்கும் வாய்ப்பு பறிபோயுள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி, எட்டு போட்டிகளில் களமிறங்கி 201 ரன்கள் விளாசியுள்ளார். இவரது ஆவரேஜ் 50.25 ஆக உள்ளது. இவரது அதிகபட்ச ஸ்கோர் 46* ஆகும். ஏற்கனவே காயம் காரணமாக இப்போது உலககோப்பை அணியில் இல்லாததால், இவரது இடத்தில் தொடர்ந்து களமிறங்கும் வீரர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆல் ரவுண்டர்ருக்கான இடத்தில் இறக்க இந்திய அணி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், ஜடேஜாவின், பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டையும் ஒரு சேர நம்புவதோ, அல்லது மேட்ச் வின்னிங் ப்ளேயர் என நம்பிக்கை அளிக்கும் வீரராகவோ இவர்கள் மூவரும் இல்லை என்பது பலருக்கும் வருத்தம் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சஞ்சு சாம்சன், தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் இல்லாததும் பேசப்பட்டு வருகிறது.