இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று மாலை ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. அதில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். 


இந்தநிலையில், உலகக் கோப்பை டி20 இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "கனவு நனவானது" என பதிவிட்டுள்ளார். 






தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஆர்சிபியில் ஆட்டத்தை முடிக்கும் பணி டிகேக்கு வழங்கப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார். இதன் காரணமாக நீண்ட வருடங்களுக்கு பிறகு சர்வதேச இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தனது ஃபார்மை வெளிபடுத்தினார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனியின் அணியில் இருந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா டி20 2007 ம் ஆண்டு உலகக் கோப்பை கோப்பையை வென்றபோது ரோஹித் ஷர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதையடுத்து பல கிரிக்கெட் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.