துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி இந்தியா நிர்ணயித்த 151 ரன்கள் இலக்கை எந்தவித சிரமும் இல்லாமல் அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலககோப்பை போட்டிகளில் இந்தியாவை முதன்முறையாக வீழ்த்தி புதிய சகாப்தத்தை படைத்தது பாகிஸ்தான்.


போட்டி முடிந்த பிறகு இந்திய கேப்டன் விராட்கோலி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் நிருபர் ஒருவர், இஷான்கிஷான் உள்ள பார்மிற்கு அவரை ஒரு வேளை டாப் ஆர்டராக களமிறக்கும் தேவைகள் உள்ளதா? அதற்காக ரோகித்சர்மாவை ஆடும் லெவனில் இருந்து விடுவிப்பிர்களா? என்று கேட்டார்.




இந்த கேள்வியை எதிர்பாராத விராட்கோலி ஒரு நிமிடம் திகைத்து விட்டார் என்பதே உண்மை. அதேநேரத்தில் நிருபரின் இந்த கேள்வியால் கோபமடைந்த விராட்கோலி, தனது கோபத்தை வெளிக்காட்டாமல் நிதானமாக அந்த நிருபருக்கு பதிலளித்தார்.


நிருபருக்கு பேட்டி அளித்த விராட்கோலி கூறியதாவது, “ இது மிகவும் தைரியமான கேள்வி. நீங்கள் என்ன நினைக்குறீங்க சார்? நான் களமிறக்கிய ஆடும் லெவன் சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். உங்க கருத்து என்ன? நீங்க ரோகித்சர்மாவை விட்டு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விலக்கிவிடுவீர்களா? கடைசி போட்டியில் அவர் என்ன செய்தார்னு உங்களுக்கு தெரியுமா?” என்று தனது ஆதங்கத்தை மிகவும் அமைதியாகவே வெளிப்படுத்தினார்.






பின்னர், உடனே அந்த நிருபரிடம், “ஒருவேளை உங்களுக்கு சர்ச்சையான பதில்தான்  தேவை என்றால் என்னிடம் முன்னாடியே கூறுங்கள். நான் துல்லியமாக அதற்கு பதிலளிக்கிறேன்” என்று அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.




இந்திய அணியின் ஜாம்பவான்களில் ரோகித் சர்மா தவிர்க்கவே முடியாதவர். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டைசதம் அடித்து யாராலும் நெருங்க முடியாத சாதனைகளை தன்வசம் வைத்துள்ளவர். நேற்றைய போட்டியில் ஷாகின்ஷா அப்ரிடி வீசிய வேகப்பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகிய 1 ரன்னில் வெளியேறினார்.


அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. களத்தில் ரோகித் சர்மா 5 ஓவர்கள் நின்றுவிட்டாலே அவர் எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண