பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் டி-20 உலகக்கோப்பை போட்டி ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. பரபரப்புடன் தொடங்கிய இந்த டி-20 போட்டி சகோதரத்துவம், ஸ்ப்ரிட் ஆஃப் தி கேம் என பாஸிட்டீவாக முடிந்துள்ளது. வெற்றி, தோல்வி, அதை சுற்றி இருக்கும் அரசியலை புறம் வைத்துவிட்டு விளையாட்டை விளையாட்டாக மட்டுமே அனுகப்பட்டது. இந்நிலையில், உலக பிரபலமான பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் புகைப்படம் மீண்டும் வைரலாகி வருகின்றது. 


2019 உலகக்கோப்பை தொடர் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்த்தவர்கள் இவரை மறந்திருக்க மாட்டார்கள். அந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. போட்டியை காண மைதானதம் வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், மிகுந்த ஏமாற்றத்துடன் இடுப்பில் கை வைத்து கொண்டு நிற்கும் புகைப்படம் உலக வைரலானது. அந்த புகைப்படத்தில் இருப்பவரின் பெயர், முகமது சரிம் அக்தர். பல பிரபல கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில், மீம் டெம்ப்ளேட்டாக நெட்டிசன்களின் கையில் சிக்கியவர் இன்று பாகிஸ்தானின் வெற்றிக்கு பிறகு, புன்னகைத்திருக்கிறார்.


Watch Video: ‛ ஒரு நாள் பாக்., வெற்றி பெறும்...’ அன்றே சொன்ன தோனி...!


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது பாகிஸ்தான்.  இந்த முறை மைதானத்திற்கு போகாத அவர், வெற்றியை கொண்டாடும் வகையில், பாகிஸ்தான் அணி ஜெர்ஸியை அணிந்துகொண்டு, மகிழ்ச்சியாக ஒரு செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளார் அவர். 










கடந்த இரண்டு ஆண்டுகளாக, நெட்டிசன்கள் அவரது மீம் டெம்ப்ளேட்டை போட்டு தேய்த்தனர். இந்நிலையில், ஒரு வழியாக அந்த டெம்ப்ளேட்டுக்கு எண்டு கார்டு போட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. முகமதுவின் செல்ஃபி பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி உள்ளது. அவரது பதிவை பகிர்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், பாகிஸ்தானின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்து நட்பை இரட்டிப்பாக்கி உள்ளனர். 


மகிழ்ச்சி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண