இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா பரவல் காரணமாக இயக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது.


இந்தநிலையில், நேற்று முன் தினம் துபாயில் நடைபெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக டி 20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஐசிசி தொடரில் ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி, டி 20 உலகக்கோப்பை என மொத்தம் ஆஸ்திரேலியா அணி 8 கோப்பையை தன்வசமாக்கியுள்ளது. 



ஆஸ்திரேலியா அணியின் இந்த வெற்றிக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் சங்கம் இந்த தொடரில் விளையாடிய சிறப்பு மிக வீரர்கள் அணியை அறிவித்தது. அதில், ஆசியாவை சேர்ந்த 4 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதேபோல், டி 20 போட்டி என்றால் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரர்களும் இந்த அணியில் இடம் பெறவில்லை. 


இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 இன்னிங்ஸில் 303 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 இன்னிங்ஸில் 289 ரன்கள் அடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 281 ரன்கள் எடுத்துள்ளார். 



பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்ரீலங்கா அணியை சேர்ந்த வணிந்து ஹசரங்கா 8 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆடம் ஜாம்பாவும், நியூசிலாந்து அணியை சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் தலா 7 போட்டிகளில் 13 விக்கெட்களை கைப்பற்றி 2 மற்றும் 3 இடத்தில் உள்ளனர். 



ஐசிசி வெளியிட்ட மிகவும் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியல் பின்வருமாறு : 


1.டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா), 2.விக்கெட்கீப்பராக ஜாஸ் பட்லர்(இங்கிலாந்து), 3.பாபர் அசாம் (c) கேப்டன்(பாகிஸ்தான்), 4. அசலங்கா(இலங்கை), 5. மார்க்ரம்(தென் ஆப்பிரிக்கா), 6.மொயின் அலி(இங்கிலாந்து),7.வணிந்து ஹசரங்கா(இலங்கை), 8.ஆடம் ஜாம்பா(ஆஸ்திரேலியா), 9.ஜாஸ் ஹாசில்வுட்(ஆஸ்திரேலியா), 10.ட்ரெண்ட் போல்ட்(நியூசிலாந்து), 11.ஆன்ரிச் நார்ட்ஜே(தென் ஆப்பிரிக்கா) 12.சஹீன் அப்ரிடி(பாகிஸ்தான்). 


இதில் டி 20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண