2021 ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு நவம்பர் 20-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற உள்ளது. 






ஐபிஎல் முடிந்த கையோடு தோனி, ஜடேஜா உள்ளிட்டோர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்துவிட்ட நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பாராட்டு விழா வைக்கப்படும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, 2021 ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றிருந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.






மேலும் படிக்க: IPL 2021 CSK : முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், சி.எஸ்.கே டீமுக்கும் இருக்கும் பந்தம் தெரியுமா?


இந்நிலையில், நவம்பர் 20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தோனி, ஜடேஜா, ரெய்னா, அணி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.


இன்று, தமிழ்நாடு முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்த தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி விழாவிற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார். 


கலைஞருக்கும் சிஎஸ்கேவுக்கும் உள்ள பந்தம் பற்றி தெரியுமா? - வீடியோவைக் காண



மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண