உலககோப்பை போட்டித்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைவு பெற்றது. அந்த தொடரில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் போராடி தோற்றது. இந்த நிலையில், நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.


இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள விராட்கோலிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.





இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மூத்த வீரர் டிம் சவுதி நியூசிலாந்து அணியின் கேப்டனாக முதல் போட்டியில் செயல்பட உள்ளார். அதே சமயத்தில், 30 வயதான லோகி பெர்குசன் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டித்தொடரில் பங்கேற்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்திய அணிக்கு எதிராக ஆடாதது அந்த அணியினருக்கு பெரும் பின்னடைவு ஆகும்.


அதேசமயத்தில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து கேப்டனாக கனே வில்லியம்சன் மீண்டும் களமிறங்க உள்ளார். நவம்பர் 25-ந் தேதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில், கப்தில், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், டிம் சவுதி, ட்ரென்ட் போல்ட் முக்கிய வீரர்கள் டி20 மற்றும் டெஸ்ட் இரு தொடர்களிலும் பங்கேற்க உள்ளனர்.




இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கான டி20 தொடரின் முதல் போட்டி நாளை ஜெய்ப்பூரிலும், 19-ந் தேதி ராஞ்சியிலும், 21-ந் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான டி20 அணியில் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் ஆடும் லெவனில் இடம்பெற உள்ளார். இவர்களுடன் ஐ.பி.எல்.லில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ரிஷப்பண்ட், இஷான்கிஷான், புவனேஷ்குமார், தீபக்சாஹர், சூர்யகுமார் யாதவ், சாஹல், அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண