டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கியுள்ளது. அதில் துபாயில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினர். எனினும் கேப்டன் விராட் கோலி மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். 


இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 151 ரன்கள் எடுத்தது.  இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இந்திய வீரர்கள் பிளாக் லைவஸ் மேட்டர் என்ற இயக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் தங்களுடைய ஒரு காலை முட்டி போட்டு நின்றனர். இனவெறி தாக்குதலுக்கு எதிரான நடைபெறும் இந்த இயக்கத்திற்கு இந்திய வீரர்கள் ஆதரவு அளித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் வீரர்கள் இந்த பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர். 




இதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் வீரர்களும் தங்களுடைய ஆதரவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் செயலை பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர். 


 






 






 






பாகிஸ்தான் அணி தற்போது வரை 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி முதல் விக்கெட் எடுக்க முயற்சி செய்து வருகிறது. 


 


மேலும் படிக்க:நாலாபுறமும் பறக்கவிட்ட கோலி.. பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு!