டி20 உலகக் கோப்பை தொடரில் தகுதிச் சுற்று போட்டிகள் முடிந்து இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்குகின்றன. இந்திய  அணி நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த இரு அணிகள் மோதும் போட்டி என்றால் ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு பெரிய விருந்தாக அமையும். இந்தப் போட்டிக்கு முன்பாக இரு அணியின் வீரர்களும் தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த போது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களுடைய பயிற்சியை முடித்து சென்றுள்ளனர். அப்போது இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் தோனியும் வீரர்களுடன் பேருந்தில் ஏற சென்றுள்ளார். அந்த சமையத்தில் பயிற்சில் ஈடுபட்டு கொண்டிருந்த பாகிஸ்தான் இளம் வீரர் ஷநாவாஸ் தஹானி தோனியை பார்த்து பேசியுள்ளார். அப்போது அவர், "நீங்கள் மிகவும் ஃபிட்டாக உள்ளீர்கள்" என்று கூறியுள்ளார். இதற்கு  மகேந்திர சிங் தோனி, "எனக்கு வயது அதிகமாகிவிட்டது. நான் ஃபிட்டாக இல்லை" எனக் கூறினார். இதை மறுத்த பாகிஸ்தான் வீரர் தஹானி, "இல்லை இல்லை முன்பைவிட தற்போது தான் நீங்கள் பார்க்க ஃபிட்டாக இருக்கிறீர்கள்" எனக் கூறியுள்ளார். 


 






இந்திய அணியின் ஆலோசகர் தோனி மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷநாவாஸ் பேசும் காட்சிகள் தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அது தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தவர் ஷநாவாஸ் தஹானி. இவருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அதனால் அவரை பார்த்து அவருடன் பேச வேண்டும் என்பதை தன்னுடைய கனவுகளில் ஒன்றாக இவர் வைத்துள்ளார். 


 






இதனிடையே நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட அணியில் அனுபவ வீரர்கள் சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹஃபீஸ் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். நாளைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் ஷநாவாஸ் தஹானி இடம்பெறவில்லை. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 5 முறை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மோதியுள்ளனர். அவற்றில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:இந்தியாவுடன் மோதும் பாக்., அணி அறிவிப்பு... டி20 உலகக் கோப்பையில் எகிறும் எதிர்பார்ப்பு...!