டி20 உலகக் கோப்பை 2024ல் இன்று இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டியில் மோத இருக்கிறது.  இந்த இரு அணிகளும் இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது. 

இந்தநிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் இங்கே பார்ப்போம். 

நிறவெறிக் கொள்கையால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடவில்லை. அதன்பிறகு கடந்த 1991ம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கு அழைத்த முதல் அணி இந்தியாதான். 

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் சந்திப்பில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அப்போதிலிருந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 

சர்வதேச போட்டிகளில் இதுவரை இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 164 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் அதிக பட்சமாக தென்னாப்பிரிக்கா அணி 80 போட்டிகளிலும், இந்திய அணி 70 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. மேலும், 10 போட்டிகள் டிரா ஆன நிலையில், 4 போட்டிகள் முடிவில்லாமல் போயுள்ளது. 

சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்: 

வடிவம்

போட்டிகள்

இந்தியா வெற்றி 

தென்னாப்பிரிக்கா வெற்றி 

டிரா/டை/முடிவில்லை

டெஸ்ட்

44

16

18

10

ஒருநாள்

94

40

51

3

டி20

26

14

11

1

மொத்தம்

164

70

80

14

உலகக் கோப்பையில் இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

போட்டி

போட்டிகள்

இந்தியா வெற்றி 

தென்னாப்பிரிக்கா வெற்றி  

டிரா/டை/முடிவில்லை

ஒருநாள் உலகக் கோப்பை

6

3

3

0

டி20 உலகக் கோப்பை

6

4

2

0

மொத்தம்

12

7

5

0

இரு அணிகளுக்கும் இடையேயான சாதனை பதிவுகள்: 

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிகபட்ச அணியின் ஸ்கோர் : 2010 ம் ஆண்டு ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 643/6d ரன்கள் எடுத்தது. 

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் குறைந்த அணியின் ஸ்கோர் : 2024 ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு சுருட்டியது.

டெஸ்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : 2008 ம் ஆண்டு சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் 319 ரன்கள் குவித்தார். 

டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு : 2015 ம் ஆண்டு நாக்பூரில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் 12/98 எடுத்தார். 

 ஒருநாள் போட்டியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா:

2015ம் ஆண்டு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 438/4 ரன்களை குவித்தது.

2023ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை மோதலில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 83 ரன்களுக்கு சுருட்டியது.

2010ம் ஆண்டு குவாலியரில் உள்ள கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200* ரன்கள் எடுத்தார்  .

ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு : 1999ம் ஆண்டு நைரோபியில் உள்ள ஜிம்கானா கிளப் ஸ்டேடியத்தில் நடந்த LG கோப்பையின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவின் சுனில் ஜோஷி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். 

டி20யில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா:

டி20யில் அதிகபட்ச அணியின் ஸ்கோர் : 2022 ம் ஆண்டு கவுகாத்தியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 237/3 எடுத்தது. 

டி20யில் குறைந்தபட்ச அணியின் ஸ்கோர் : 2022 ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடந்த நான்காவது டி20 போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 87 ரன்களுக்கு சுருட்டியது. 

டி20யில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : 2022 ம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்தார். 

டி20யில் சிறந்த பந்துவீச்சு : 2023 ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 5/17 ஐ எடுத்தார்.