T20 WC 2022 ENGvsAUS: இன்று மெல்பர்னில் மழை காரணமாக இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது.


டி20  உலக கோப்பை கிரிக்கெட்  தொடர், மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழையால் சில போட்டிகள் ரத்தாவது சுவாரஸ்யத்தை குறைக்கிறது. கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற தென்னப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா ஜெயித்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.


அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவேண்டிய 2 போட்டிகள் ரத்தாகியுள்ளன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்தது. அதே நாளில் நடந்த நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்தானது. 


இந்நிலையில் இன்று இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதவிருந்த சூப்பர் 12 சுற்று போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிவிருந்தது. மெல்போர்ன் நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.






இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டிருந்தது. மெல்போர்னில் இன்று நடைபெறவிருந்த இரண்டு போட்டிகளும் மழையால்  ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


மேலும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், இறுதிப்போட்டியும் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.  


மேலும் படிக்க


T20 WC 2022 IREvsAFG : ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து.! புள்ளிப்பட்டியலின் நிலவரம் என்ன..?


மிஸ்டர் பீனுக்கு பதிலா பாக் பீனை அனுப்பினீர்கள்: அதற்கான பதிலடிதான் இது! பாகிஸ்தானை கலாய்க்கும் ஜிம்பாப்வேயினர்!