நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் ஜிம்பாப்வே பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில், போட்டிக்கு சம்மந்தம் இல்லாத ஒன்றை வைத்து பாகிஸ்தானை ட்ரோல் செய்து வருகின்றனர் ஜிம்பாப்வே ரசிகர்கள்.






என்ன வரலாறு?


விஷயம் என்னவென்றால், ஜிம்பாப்வேயர்கள் தங்கள் நாட்டுக்கு போலி மிஸ்டர் பீனை அனுப்பியதற்காக பாகிஸ்தான் மீது கோபம் கொண்டுள்ளனர். பாக் நகைச்சுவை நடிகர் ஆசிப் முஹம்மது என்பவர் பார்ப்பதற்கு மிஸ்டர் பீன் போல முகச்சாயல் கொண்டவர். அவர் மிஸ்டர் பீனை போலவே உடை மாற்றும் ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு வலம் வருபவர். ஒருமுறை 2016 இல் ஜிம்பாப்வேக்கு அவர் பயணம் செய்தார். அங்கு அவர் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், சாலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் மற்றும் ஹராரே விவசாய கண்காட்சியின் ஒரு பகுதியாக இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: லட்சுமி, விநாயகர் வேண்டாம்....ரூபாய் நோட்டில் மோடி படத்தை அச்சிடுங்கள்... ஃபோட்டோஷாப் புகைப்படத்துடன் பாஜக எம்எல்ஏ ட்வீட்!


பழி தீர்ப்போம்


சில நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வேயைச் சேர்ந்த நுகி சசுரா, பாகிஸ்தான் போலியான மிஸ்டர் பீனை தங்கள் நாட்டுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தை கிரிக்கெட் போட்டியில் தீர்த்து வைக்குமாறு பாகிஸ்தானுக்கு சவால் விடுத்தார். "ஜிம்பாப்வேயினராகிய நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்... மிஸ்டர் பீனுக்கு பதிலாக பாக் பீன் என்ற போலியை எங்களுக்குக் கொடுத்தீர்கள், இந்த விஷயத்தை நாளைய போட்டியில் தீர்த்து வைப்போம், மழை உங்களைக் காப்பாற்றும் என்று பிரத்தியுங்கள்", என்று போட்டிக்கு முந்தைய நாள் ட்வீட் செய்திருந்தார்.






நிரம்பி வழியும் மீம்ஸ்


நேற்று ஜிம்பாப்வே ஆட்டத்தில் வெற்றி பெற்றவுடன், சமூக ஊடகங்களில் பாக் பீன் தொடர்பான மீம்ஸ்கள் நிரம்பி வழிகின்றன. ஜிம்பாப்வே பாக் பீனை அனுப்பியதாக கிரிக்கெட் போட்டியில் பழிவாங்கி உள்ளார்கள் என்று கலாய்த்து வருகின்றனர். உங்களுக்காக இங்கு சில மீம்ஸ்: