இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் (இந்தியன் ப்ரீமியர் லீக்) போன்று ஆஸ்திரேலியாவில் மிக பிரபலமானது டி20 பிக்பாஷ் லீக். தற்போது இந்த லீக் தொடரானது ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 

மெல்போர்ன் ரேனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், பிரிஸ்பேன் ஹீட், கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ், சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தநிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகள் நேருக்குநேர் மோதினர். முதலில் டாஸ் வென்ற அடிலெய்டு அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய அடிலெய்டு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்களும், காலின் டி கிராண்ட்கோம் 33 ரன்களும் எடுத்திருந்தனர். 

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிய இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி தொடக்கம் முதலே பரிதாபமாக தனது விக்கெட்களை இழக்க தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கிளக்ஸ் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து களமிறங்கிய டி20 உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ரிலே ரூசவ் 3 ரன்களில் வெளியேறினார். 

பின்னர் தொடர்ச்சியாக உள்ளே வந்த பேட்ஸ்மேன்கள் சீட்டு கட்டு போல தங்கள் விக்கெட்களை விட்டுகொடுக்க, 5.5 ஓவர்களில் சிட்னி தண்டர்ஸ் அணி அனைத்து விக்கெட்களை இழந்து 15 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் அடிலெய்டு அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

சிட்னி அணியில் அதிகபட்சமாகவே பிரெண்டன் டோகெட் 4 ரன்களும், ரிலே ரூசவ் 3 ரன்களும் எடுத்திருந்தனர். அதேபோல், அடிலெய்டு அணியில் ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டுகளும், வெஸ் அகர் 4 விக்கெட்டுகளும் , மத்தேயு ஷார்ட் 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர். 

 சாதனைகள்:

  • பிக் பாஷ் லீக்கின் இத்தனை ஆண்டுகளில் தண்டருக்கு முன் எந்த அணியும் 50 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழந்தது இல்லை. 
  • 5.5 ஓவர்களில் சிட்னி தண்டர்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 பார்மேட்டில் மிக குறைந்த ஓவர்களில் ஆல் அவுட் ஆன அணியாக சிட்னி தண்டர்ஸ் மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக, கடந்த 2019 ம் ஆண்டு செக் குடியரசிற்கு எதிராக 8.3 ஓவர்களில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்த போது துருக்கி இந்த மோசமான சாதனையை படைத்தது.
  •  ஹென்றி தோர்ன்டன் மற்றும் வெஸ் அகர் பிபிஎல்லில் ஒரே இன்னிங்ஸில் நான்கு பிளஸ் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஜோடி. 2016-17 சீசனின் அரையிறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக நாதன் லயன் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்
  • அடிலெய்டு விக்கெட் கீப்பர் ஹாரி நீல்சன் நேற்றைய சிட்னி அணிக்கு எதிராக 5 கேட்சுகளை பதிவு செய்தார். ஒரு இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் அதிக ஆட்டமிழக்கச் செய்த பிபிஎல் சாதனையை சமன் செய்தார். 2012-13ல் மெல்போர்ன் ரெனகேட்ஸுக்கு எதிராக ஸ்கார்ச்சர்ஸின் டாம் டிரிஃபிட் ஐந்து கேட்சுகளையும், 2019-20ல் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஜிம்மி பீர்சன் நான்கு கேட்சுகளையும் ஸ்டம்பிங் செய்திருந்தனர். 

டி20 கிரிக்கெட்டில் குறைந்த ஸ்கோர்

அணி

ஆண்டு

ரன்கள்

ஓவர்கள்

எதிரணி

சிட்னி தண்டர் 2022

15

5.5

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்
துருக்கி 2019

21

8.3

செ குடியரசு
லெசோதோ 2021

26

12.4 உகாண்டா
துருக்கி 2019

28

11.3

லக்சம்பர்க்
தாய்லாந்து  2022 30 13.1 மலேசியா
மாலி 2022 30 12.3 ருவாண்டா 
திரிபுரா 2009 30 11.1 ஜார்கண்ட்
மாலி 2022 30 10.4 கென்யா