டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 12 போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இம்முறை டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி போட்டிகளில் யுஏஇயில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையும் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் யுஏஇ ஐபிஎல் போட்டிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் உலகக் கோப்பை போட்டி செயல்பாடுகள் என்னென்ன? 

சூர்யகுமார் யாதவ்: 

2010 ஆம் ஆண்டு முதல் ரஞ்சி கோப்பை போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வருகிறார். 10 வருடங்கள் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி இருந்தாலும் இந்திய அணிக்காக அவர் ஒரு போட்டியில் கூட விளையாட தேர்வாகவில்லை. அப்படி இருக்கும் போது 2020 ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டம் காரணமாக 2021ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக களமிறங்கினார். இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் இரண்டு அரைசதங்கள் கடந்துள்ளார். 


ஐபிஎல் யுஏஇ கடைசி 5 போட்டிகள்: 

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி யுஏஇயில் நடைபெற்றது. அதில் கடைசி 5 போட்டிகள் சூர்யகுமார் யாதவின் செயல்பாடுகள்: 

போட்டி 

மைதானம்

ரன்கள் 

ராயல் சேலஞ்சர்ஸ்

துபாய் 

8(9)

பஞ்சாப் கிங்ஸ்

அபுதாபி 

0(1)

டெல்லி கேபிடல்ஸ்

ஷார்ஜா

33(26)

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஷார்ஜா

13(8)

சன்ரைசர்ஸ் 

அபுதாபி

82(40)

ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் யுஏஇ போட்டிகளில் சற்று ஃபார்மிற்கு திரும்பியிருந்தார். எனினும் அவர் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் செயல்பட்டது போல் இந்த தொடரில் செயல்படவில்லை. அவரின் பேட்டிங் அந்த அளவிற்கு யுஏஇயில் எடுபடவில்லை.

 

டி20 உலகக் கோப்பை:

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது வரை விளையாடியுள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் மட்டும் களமிறங்கினார். 

போட்டி 

மைதானம்

ரன்கள் 

பாகிஸ்தான்

துபாய் 

11 (8)

நியூசிலாந்து

துபாய்

களமிறங்கவில்லை 

 

நியூசிலாந்து போட்டியில் அவர் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் போட்டியில் அவர் 8 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வேகமாக பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சொதப்பியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் அவர் நியூசிலாந்து போட்டியில் சேர்க்கப்படவில்லை என்று கருதப்படுகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் இருந்த ஃபார்ம் தற்போது சூர்யகுமார் யாதவிற்கு இல்லை. ஆகவே அவர் இப்போது அதிகமாக திணறி வருகிறார். குறிப்பாக இம்முறை யுஏஇயில் அவர் அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஆட்டமிழந்து வருகிறார். அதுவும் அவருக்கு பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க: படுமோசமான ஃபார்ம்... எப்படி தேர்வானார் ரோஹித் சர்மா? ஆராயும் ABP நாடு!