விராட் கோலி தனது மோசமான ஃபார்ம் மற்றும் மோசமான ஷாட் தேர்வுக்காக ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இதனிடையே, சச்சின் டெண்டுல்கரை போல் விளையாட வேண்டும் என்று கோலிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கினார்.
காபா டெஸ்ட்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா சொதப்பல்:
தனது முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணியில் வழக்கம போல முன்வரிசை வீரர்கள் சொதப்பினர். ஜெய்ஸ்வால் 4 ரன்கள், கில் 1 ரன்கள், கோலி 3 ரன்கள் ஆட்டமிழந்தனர். இதில் விராட் கோலியின் ஆடிய ஷாட் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை:
காபா டெஸ்டில் விராட் கோலி இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் போது, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை தொட்ட கோலி கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் ஆட்டமிழந்தார். இப்படி அவுட் ஆன பிறகு, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோலிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கினார். 2003-04ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது சிட்னி டெஸ்டில் சச்சின் கவர் டிரைவ் இன்றி 241 ரன்கள் அடித்திருந்தார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய கவாஸ்கர், "சச்சின் டெண்டுல்கர் 2004ல் என்ன செய்தார் என்பதை கோஹ்லி ஒருவேளை பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன். முதல் மூன்று டெஸ்டில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே லைனில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனார். அவர் ஸ்லிப்பில்,ஷார்ட் கல்லியில் கேட்ச்களை கொடுத்து ஆட்டமிழந்தார்.
கவர் டிரைவ் ஆடவில்லை:
ஆனால் அவர் சிட்னிக்கு வந்தபோது, பந்தை பின்தொடர்ந்து ஆப் சைட் திசையில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தார். குறிப்பாக கவர் டிரைவ் விளையாட வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தார். அதேப் போல 200-220 ரன்களை எட்டிய பிறகுதான் அவர் கவர் டிரைவ் விளையாடினார்.
கவாஸ்கர் மேலும் கூறுகையில், "இந்த மாதிரியான மனக் கட்டுப்பாட்டை நீங்கள்(விராட் கோலி) கொண்டிருக்க வேண்டும். 2003-04 தொடரின் சிட்னி டெஸ்டில் டெண்டுல்கர் ஒரு அற்புதமான மறுபிரவேசம் செய்தார். அதற்கு முன், அவர் கவர் டிரைவ் அடிக்க முயன்றபோது பலமுறை அவுட் ஆனார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் வியூகம், அவர் தனது ஆட்டத்தில் இருந்து கவர் டிரைவை முழுவதுமாக அகற்ற முடிவு செய்தார், இந்தியா இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்படுவதற்கு முன்பு 436 பந்துகளில் ஆட்டமிழக்காமல் சச்சின் 241 ரன்கள் எடுத்தது. சச்சின் ஆஸ்திரேலிய தாக்குதலை தவிடுபோடியாக்கி அவர்களின் திட்டங்களை முறியடித்ததால், இந்தியா 705/7 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது.