உலகின் விறுவிறுப்பான டெஸ்ட் தொடர்களில் ஆஷஸ் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


இந்த தொடர் தொடங்கியது முதல் சொதப்பி வரும் டேவிட் வார்னருக்கு ஒவ்வொரு இன்னிங்சிலும் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் எமனாக மாறி வருகிறார். இந்த நிலையில், இந்த டெஸ்டின் நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 1 ரன்னில் ஜாக் கிராவ்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.


17வது முறை:


டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னரை ஸ்டூவர்ட் பிராட் அவுட்டாக்குவது இது 17வது முறையாகும். இதன்மூலம் அவர் உலக சாதனையின் மிக அருகில் உள்ளார். ஒரே வீரரை டெஸ்ட் போட்டியில் அதிக முறை அவுட்டாக்கிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை தற்போது ஆஸ்திரேலிய முன்னாள்  வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் தன்வசம் வைத்துள்ளார். இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆதர்டனை இதுவரை 19 முறை டெஸ்ட் போட்டிகளில் அவுட்டாக்கியுள்ளார்.






அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் அலெக் பெட்சர் உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவின் ஆர்தர் மோரிசை 18 முறை அவுட்டாக்கியுள்ளார். தற்போது 3வது இடத்தில் ஸ்டூவர்ட் பிராட் உள்ளார். அவர் டேவிட் வார்னரை இதுவரை 17 முறை அவுட்டாக்கியுள்ளார். ஏற்கனவே ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆம்ப்ரோஸ் மைக்கேல் ஆதர்டனை 17 முறையும், ஜாம்பவான் கோர்ட்னி வால்ஸ் 17 முறை மைக்கேல் ஆதர்டனையும் வீழ்த்தியுள்ளனர். தற்போது அவர்களுடன் 3வது இடத்தை பிராட் பகிர்ந்துள்ளார்.


வெற்றி யாருக்கு?


ஸ்டூவர்ட்ங பிராட் டேவிட் வார்னருக்கு எதிராக இதுவரை 54 இன்னிங்சில் பந்துவீசியுள்ளார். அதில் 17 முறை அவருக்கு இரையாகியுள்ளார். இந்த தொடரில் மிக மோசமாக அடுத்தடுத்து அவரது பந்திலே வார்னர் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டி நேர முடிவில் ஆஸ்திரேலிய அி 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை இழந்து 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


ஆட்டம் 2 நாட்களே முடிந்துள்ளதாலும், இந்த போட்டி முடிய இன்னும் 3 நாட்கள் இருப்பதாலும் கண்டிப்பாக இந்த போட்டிக்கு முடிவு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.


மேலும் படிக்க: HBD Souvrav Ganguly: ஆக்‌ஷன்.. அதிரடி.. அதகளம்..! கிரிக்கெட்டில் தனி ராஜாங்கம் நடத்திய 'தாதா' கங்குலி..!


மேலும் படிக்க: HBD MS Dhoni: தோனி ஏன் மாஸ்டர் மைண்ட்? முக்கியமான போட்டிகளில் தோனி எடுத்த எதிர்பாராத, வெற்றிகரமான 5 முடிவுகள்!