டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் முதலிலிடத்தில் இருந்த ஜோ ரூட்டின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம்
பிரிஸ்பேன் நகரில் தி கபா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. நேற்று (14.12.2025)ஆட்டம் தொடங்கிய 13- ஓவர்களில் மழை குற்றுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இரண்டாவது நாளான இன்று (15.12.2024) டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை மாற்றியது. நிதானமாக ஆடத் தொடங்கிய இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை பவுண்ரிகளாக மாற்றினர்.
115 பந்துகளில் ஹெட் சதத்தை எட்டினார். 128 பந்துகளில் அரைசதம் கண்ட ஸ்மித், அடுத்த 57-வது பந்தில் சதம் அடித்தார். ஸ்டீவ் ஸிமித் 25 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அடித்துள்ளது. இதன் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
344 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்மித், 45 சதம், 80 அரைசதம் என 16,561 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெடில் ஸ்மித் 9,800 ரன்களை எடுத்துள்ளார். 2024-ல் ஸ்டீவ் ஸ்மித் சிறந்தமுறையில் பர்ஃபாம் செய்யவில்லை. இந்த இன்னிங்சில் சிறப்பான விளையாடி சதம் அடித்து புதிய சாதனையை எட்டியுள்ளார்.பும்ரா பந்தில் ஸ்டீவ் ஸ்மித் (101 ரன்கள்), ட்ராவிஸ் ஹெட் (152 ரன்கள்) இருவரும் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா -அதிக சதம் அடித்த வீரர்கள்:
- 41 - ரிக்கி பாண்டிங் (168 போட்டிகள்)
- 33 - ஸ்டீவ் ஸ்மித் (112* போட்டிகள்)
- 32 - ஸ்டீவ் வாக் (168 போட்டிகள்)
- 30 - மேத்யூ ஹைடன் (103 போட்டிகள்)
- 29 - டோனால்டு ப்ராட்மேன் (52 போட்டிகள்)
ஸ்டீவ் ஸ்மித் சாதனைகள்:
- இந்த சதம் மூலம் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் சாதனையை சமன் செய்துள்ளார்.
- ஸ்வீட் ஸ்மித் - 10 சதங்கள் (41 இன்னிங்க்ஸ்)
- ஜோ ரூட் - 10 சதங்கள் (55 இன்னிங்க்ஸ்)
- பார்டர்- கவாஸ்கர் கோப்பஒ தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். மூவரும் 9 சதங்கள் அடித்துள்ளனர்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்-ன் சாதனையை முறியடித்துள்ளார்.