தமிழ்நாடு பிரிமீயர் லீக்லின் 15வது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு சேலத்தில் உள்ள  SCF கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. 


இந்த சீசனில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மதுரை அணி  இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 2 லிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து, முதல் வெற்றிக்காக மதுரை அணி போராடும். 


நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. எனவே, நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்த சேலம் ஸ்பார்டன்ஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். 


நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி தோல்வியடைந்தது. அதேபோல், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் சிசெம் மதுரை பாந்தர்ஸ் தோல்வியடைந்தது. எனவே, இந்த போட்டியில் கட்டாய வெற்றி என்ற அடிப்படையில் களமிறங்கும். 


நேருக்கு நேர்: 


டிஎன்பிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், இரு அணிகளும் தலா 3 முறை வெற்றி கண்டுள்ளது.  


பிட்ச் வடிவம் எப்படி..? 


சேலத்தில் உள்ள SCF கிரிக்கெட் மைதானத்தில் உள்ள டிராக் பந்துவீச்சுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகிறது. ஆகவே, மைதானத்தின் கடந்த கால சாதனையை கருத்தில் கொண்டு, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.


சேலம் ஸ்பார்டன்ஸ் அணி: அமித் சாத்விக்(விக்கெட் கீப்பர்), ஆர் கவின், கௌசிக் காந்தி, மான் பாஃப்னா, எஸ் அபிஷிக், முகமது அட்னான் கான், ஆகாஷ் சும்ரா, சச்சின் ரதி, சன்னி சந்து, அபிஷேக் தன்வார்(கேப்டன்), ராஜேந்திரன் கார்த்திகேயன், எம் கணேஷ் மூர்த்தி, ஜெகநாத் சீனிவாஸ் , ஜே கௌரி சங்கர், எஸ் குரு சாயீ, என் செல்வ குமரன், பிரசாந்த் ராஜேஷ், எஸ் அரவிந்த், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், விஆர்எஸ் குரு கேதார்நாத், ரவி கார்த்திகேயன்


சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி: எஸ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த்(கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், சுதன் காண்டேபன், முருகன் அஷ்வின், எஸ் ஸ்ரீ அபிசேக், தேவ் ராகுல், குர்ஜப்னீத் சிங், பாலு சூர்யா, வி. கௌதம், பி சரவணன், கிரிஷ் ஜெயின், வி ஆதித்யா, எம் ஆயுஷ், அஜய் கிருஷ்ணா, ஷிஜித் சந்திரன், ஆண்டன் ஏ சுபிக்ஷன்