Team India Squad Announced:  இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை பிசிசிஐ நேற்று இரவு வெளியிட்டுள்ளது. இதில் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியும், ஒருநாள் தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரு அணிகளிலும் ரிஷப் பண்ட்க்கு இடமளிக்கப்படவில்லை. 


ஹர்திக் தலைமையில் டி20 தொடர் - சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் 


ஹர்திக் பாண்டயா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், சீனியர் வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே. எல். ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில், வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் முதல்முறையாக  டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.  கடந்த வெள்ளிக்கிழமை, ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் இருவரும் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றனர். தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 கோடிக்கு மாவி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், முகேஷ் குமார் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 5.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 






இலங்கை டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.


ரோகித் தலைமையில் ஒருநாள் தொடர்


வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயம் பட்ட ரோகித் ஷர்மா அந்த தொடரில் இரெஉந்து முழுவதும் விலகினார்.  இலங்கைக்கு எதிரான டி20 போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோகித் ஷர்மாவுக்கு காயம் சரியாகி வரும் நிலையில், தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களம் இறங்குகிறார். மேலும், டி20 தொடரில் ஓய்வு அளிக்கபபட்ட விராட் கோலி ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். 






இலங்கை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.